2.0 ரிலீஸ்: லீவு விட்டு ஊழியர்களுக்கு டிக்கெட்டும் கொடுத்த கம்பெனி

தயாரிப்பு நிறுவனம் லைகா, டைரக்டர் ஷங்கர், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோரது கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் 2.0

ரூ. 550 கோடியில் இப்படம் உருவாகியுள்ளதால் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நாளை உலகமெங்கும் வெளியாகிறது.

இப்படத்தை தமிழ் ராக்கர்ஸ் உட்பட 12,567 இணையதளங்களில் வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவும் பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டம் சித்தாப்புதூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனம் இப்படத்தை கண்டுகளிக்க தன் ஊழியர்களுக்கு ஒரு நாள் விடுமுறை அறிவித்துள்ளது.

அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

ரஜினிகாந்தின் கடின உழைப்பு, நேர்மை மற்றும் தொழில் அர்ப்பணிப்பு பலவற்றை கற்றுக்கொடுப்பதாக தெரிவித்துள்ளது.

படம் உலக சாதனைகள் அனைத்தையும் முறியடித்து வெற்றி பெறவேண்டும் எனவும், ரஜினிகாந்த், ஷங்கர், அக்‌ஷய் குமார் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

மேலும் படத்தை தங்கள் ஊழியர்கள் அனைவரும் கண்டுகளிக்க ஆகும் செலவை நிறுவனமே ஏற்கும் என்றும், நாளை முழு தினமும்2.0 கொண்டாட்டம் தான் என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published.

4 × 4 =