ஆஸ்திரேலிய நிறுவனம் தயாரிக்கும் குற்றப்பரம்பரை கதையில் ராதிகா

மலையாள சினிமாவில் திலீப் நடித்த ‘ராம்லீலா’ படத்தில் நாயகனின் அம்மாவாக நடித்தவர் ராதிகா சரத்குமார்.

தற்போது மீண்டும் மலையாளத்தில் ‘தி காம்பினோஸ்’ என்கிற படத்திலும் நடித்து வருகிறார் ராதிகா.

கேரளாவில் மலபார் பகுதியை சேர்ந்த ஒரு குற்றப்பரம்பரை பற்றிய ஒரு நிஜ சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாகிறதாம்.

அந்த குடும்பத்தின் மூத்தவராக, அம்மா கேரக்டரில் நடிக்கிறார் ராதிகா.

மற்றொரு முக்கிய வேடத்தில் வில்லன் நடிகர் சம்பத்தும் நடிக்கிறார்.

சிட்னியை சேர்ந்த விளம்பரப்பட இயக்குனரான கிரிஷ் பணிக்கர் என்பவர் இந்தப்படத்தை இயக்க, ஆஸ்திரேலிய நிறுவனம் ஒன்று இந்தப்படத்தை தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published.

two × 1 =