“பாகுபலி” பாணியில் ராஜராஜ சோழன் கதையை படமாக்கும் ஜனநாதன்

நம் வாழ்வியலோடு கலந்த கதைகளை படமாக்குவதில் வல்லவர் டைரக்டர் எஸ்.பி.ஜனநாதன்.

‘இயற்கை’, ‘பேராண்மை’, ‘ஈ’, ‘புறம்போக்கு’ உள்ளிட்ட படங்களை இவர் இயக்கியுள்ளார். இவை அனைத்தும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது 3 ஆண்டு இடைவெளிக்கு பின்னர் அரசர் காலத்து கதையை படமாக்க உள்ளாராம்.

பிரபல சோழ அரசரான ராஜ ராஜ சோழன்  பற்றிய வரலாற்று படத்தை இயக்க திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்காக அவர் தஞ்சாவூர் மாவட்டத்தில் தங்கியிருந்து ஆய்வு செய்து வருகிறாராம்.

மேலும் இப்படத்தை பாகுபலி பாணியில் இரண்டு பாகங்களாக உருவாக்க திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

எனவே விரைவில் இது குறித்த அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *