கஜா புயலால் வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு ரஜினி-விஜய் உதவி
நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட தமிழகத்தின் 7 மாவட்டங்களை கஜா புயல் கடுமையாக தாக்கியது.
புயல் ஓய்ந்து 5 நாட்கள் ஆன நிலையிலும் மக்கள் இன்றளவும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் நிவாரண நிதி அளிக்க வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் சார்பில் ரூ.50 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து விஜய்சேதுபதி ரூ.25 லட்சமும், சிவகார்த்திகேயன் ரூ.20 லட்சமும் நிவாரணம் வழங்கியுள்ளனர்.
டைரக்டர் ஷங்கர் 10 லட்சமும், கவிஞர் வைரமுத்து 5 லட்சமும் அளித்துள்ளனர்.
இந்நிலையில் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை ரஜினி மக்கள் மன்றம் மூலம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
நடிகர் விஜய் தனது ரசிகர் மன்றங்கள் மூலம் நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு அவர் பணத்தை வங்கியில் செலுத்தி அவர்களை உதவ உத்தரவிட்டுள்ளார்.
அண்மையில் கேரளா மாநிலத்தை வெள்ளம் தாக்கியபோதும் விஜய் இந்த பாணியிலேயே உதவி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.