பணம்-பதவி பற்றி ரஜினி சொன்னது சரிதான்..: திருநாவுக்கரசர்
பதவி & பண ஆசையில் தன் ரசிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்ற ரஜினிகாந்த் ஓர் அறிக்கை வெளியிட்டார்.
இதனை கிண்டலடித்து திமுக. வின் நாளேடான முரசொலி செய்தி வெளியிட்டது.
இந்நிலையில் ரஜினியின் அறிக்கைக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது…
“ரசிகர்கள் பண ஆசை, பதவி ஆசையுடனும் அரசியலுக்கு வரக்கூடாது என்று ரஜினிகாந்த் சொல்லி இருக்கிறார்.
இது எல்லா கட்சியினரும் சொல்லும் பொதுவான கருத்து தான். இந்த கருத்தை வரவேற்கிறேன்.
ரஜினியை தி.மு.க. விமர்சித்து இருப்பது பற்றி அவர்களிடம் தான் கேட்க வேண்டும். நான் கருத்து சொல்ல விரும்பவில்லை.” என பேசினார்.