ரஜினி படம் என் கனவுப்படம்;அதில் அரசியல் இருக்காது.. : ஏஆர். முருகதாஸ்

2.ஓ படம் வெளியாகி 45 நாட்களில் ரஜினியின் பேட்ட படம் வெளியாகவுள்ளது.
இதன் பிறகு ஏஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளார் ரஜினிகாந்த்.
சன் பிக்சர்ஸ் அல்லது லைகா இப்படத்தை தயாரிக்கும் என கூறப்பட்டு வருகிறது.
ஆனால், தயாரிப்பாளர் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் இல்லை.
இதனிடையில், ஒரு விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்ட ஏ.ஆர்.முருகதாஸ் அவர்கள் ரஜினி படத்தை இயக்குவது குறித்து மேடையில் பேசினார்.
அப்போது…
“ரஜினி சாரை வைத்து நான் இயக்கும் படத்தில் அரசியல் இருக்காது. ஆனால், மாஸ் இருக்கும்.
நீண்ட காலமாக நான் ரஜினி ரசிகன். இது என்னுடைய கனவுப்படம்” என பேசியுள்ளார் ஏஆர் முருகதாஸ்.

Leave a Reply

Your email address will not be published.

15 − 12 =