நான் முட்டாள் இல்லை.; எந்த 7 பேர்?, சர்கார் சர்ச்சை; ரஜினியின் அதிரடி பதில்கள்

சென்னை விமான நிலையத்தில் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது ஒரு நிருபர் 7 பேர் விவகாரத்தில் குடியரசு தலைவர் கடிதம் நிரகாரிக்கப்பட்டது குறித்து ஒருவர் கேட்டார்.

எந்த 7 பேர் பத்தி கேள்வி கேட்கிறீங்க? என்று ரஜினி அவரிடம் கேட்டார்.

உடனே பல மீடியாக்கள் ராஜீவ் காந்தி கொலை வழக்கு 7 பேர் விடுதலை குறித்து ரஜினிக்கு எதுவும் தெரியவில்லை என்று செய்திகளை வெளியிட்டனர்.

இது வைரலாக பரவியது. (நம் தளத்தில் இந்த செய்தி வெளியாகவில்லை)

இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் தன் போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அவர் கூறியதாவது…

*ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரை பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்ற மாயையை ஒரு சிலர் உருவாக்கி வருகின்றனர்.*

*7 பேர் குறித்து கேள்வி கேட்ட விதம் தெளிவாக இல்லை. செய்திகளை திரித்து வெளியிடாதீர்கள்.

*பேரறிவாளன் பரோலில் வந்தபோது அவரிடம் பத்து நிமிடங்கள் தொலைபேசியில் பேசி ஆறுதல் கூறியவன் நான்.*

*27 ஆண்டுகள் தண்டனை பெற்றவர்களை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்பது என்னுடைய கருத்து.*

*பாஜக ஆபத்தான கட்சியா என்ற கேள்விக்கு எதிர்க்கட்சிகள் அப்படி நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னேன். எதிர்கட்சிகளுக்கு ஆபத்தான கட்சி என்பது என்னுடைய கருத்து.*

*அன்றாட நிகழ்வுகள் குறித்து இப்போது நான் எதுவும் சொல்ல மாட்டேன். முழுதாக அரசியலுக்கு வந்த பிறகே பதிலளிப்பேன்.*

சர்க்கார் பட விவகாரத்தில் அரசு பேச்சுவார்த்தைக்கு பதிலாக எடுத்த எடுப்பிலேயே தியேட்டரை தாக்குவது, பேனரை கிழிப்பதுமிகவும் தவறான செயல். பேச்சுவார்த்தை நடத்தியிருக்கலாம்.

100% மக்களுக்கு இலவசங்கள் தேவை தான். ஆனால் அது யாருக்கு சென்றடைகிறது என்பதை பார்க்க வேண்டும். ஓட்டுக்காக இலவசங்களை கொடுக்க கூடாது. என்றார்.

*முன்னாள் முதல்வர் ஜெ மரணத்திற்கு பிறகு நடிகர்களுக்கு குளிர் விட்டு போச்சு என்ற அமைச்சரின் பேச்சு குறித்த கேள்விக்கு,பிறர் மனம் புண்படாத வகையில் அமைச்சர்கள் பேசுவது நல்லது என்றார். இதே கேள்வியை நான் அமைச்சர்களிடம் பார்த்து கேட்டால் சரியாக இருக்குமா?

*பாஜகவுக்கெதிரான எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி குறித்த கேள்விக்கு, 10 பேர் சேர்ந்து ஒருவரை எதிர்த்தால் யார் பலசாலி என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்” என நடிகர் ரஜினிகாந்த் பேட்டியளித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *