ரஜினி-முருகதாஸ் புதிய கூட்டணி; சன் பிக்சர்ஸுக்கு பதிலாக லைகா

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 2.0 படம் நவம்பர் 29ம் தேதியிலும் & பேட்ட திரைப்படம் 2019 பொங்கல் திருநாளிலும்  வெளியாகிறது.
இந்த படங்களுக்கு பின்னர் தன் கட்சியை அறிவித்துவிட்டு, ரஜினிகாந்த் முழு நேர அரசியலில் ஈடுபடுவார் என அனைவரும் எதிர்பார்த்தனர்.
இந்த நிலையில்தான் மீண்டும் ஒரு புதிய படத்தில் நடிக்கவிருக்கிறாராம் ரஜினிகாந்த்.
இதில் முதன்முறையாக ரஜினியை இயக்கவுள்ளார் ஏஆர். முருகதாஸ்.
இப்படத்தை பேட்ட தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.
ஆனால் சர்கார் கதை திருட்டு விவகாரத்தில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது கடும் அதிருப்தி அடைந்துள்ளதாம் சன் பிக்சர்ஸ்.
இதனால், முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தை தயாரிக்க ஒப்புக் கொண்டதை நிறுத்தி வைத்தது சன்.
எனவே தயாரிப்பு நிறுவனத்தை மாற்ற முடிவு செய்த ரஜினிகாந்த், லைகா-விடம் அந்த பொறுப்பை ஒப்படைத்து விட்டாராம்.
ரஜினிகாந்த் படம் என்பதால் லைகாவும் உடனே ஓகே சொல்லிவிட்டதாக தகவல்.
 ‘2.0’ மற்றும் ‘பேட்ட’ ஆகிய படங்களின் ரிலீசுக்கு பின்னர் புதிய பட அறிவிப்பை வெளியிட இருக்கிறார்களாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *