எக்ஸ்ட்ரா இருந்தால் வாழ்க்கை நல்லா இருக்காது..; பேட்ட ரஜினி பேச்சு
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், ரஜினி நடித்துள்ள பேட்ட பட இசை வெளியீட்டு விழா, சென்னையிலுள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
அனிருத் இசையமைத்துள்ள இந்த பேட்ட பட இசையை அங்கு கலந்துக் கொண்ட ரஜினி ரசிகர்களே வெளியிட்டனர்.
விழாவில் ரஜினிகாந்த் பேசியதாவது…
கஜா புயலால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு உதவியர்களுக்கு நன்றி. அது ஒரு மிகப்பெரிய பேரிழப்பு.
அரசங்காத்தால் மட்டும் அனைத்துநிவாரணத்தையும் செய்து விட முடியாது. நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து உதவ வேண்டும்.
2.0 படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. அனைத்துபாராட்டுகளும் டைரக்டர் ஷங்கருக்கும் தயாரிப்பாளருக்கும் சேரும்.
2.0 படத்தின் பிள்ளையார் சுழியை போட்டது கலாநிதி மாறன்தான். அவர்தான் எந்திரன் படத்தை தயாரித்தார்.
அந்த படம் வெற்றி பெற்ற பிறகு எனக்கு ஷங்கர் ஏஆர் ரஹ்மான் ஆகியோருக்கும் தலா 1 கோடி கொடுத்தார்.
அவரே அதன் 2ஆம் பாகத்தை தயாரிக்க இருந்தார். ஆனால் சில காலங்களாக படத் தயாரிப்பை நிறுத்தி வைத்திருந்தார்.
தற்போது மீண்டும் படம் தயாரிக்கிறார் என்பதால் பேட்ட படத்தில் நடிக்க ஓகே சொன்னேன்.
விஜய்சேதுபதி சாதாரண நடிகன் இல்லை. அவர் ஒரு மகா நடிகன். ஒரு நல்ல நடிகனுடன் இணைந்த அனுபவம் கிடைத்தது.
குழந்தைக்கு தாடி மீசை வளர்ந்தால் எப்படியிருக்கும், அந்தமாதிரி ஒரு நல்ல மனிதர் சசிகுமார்.
சிம்ரன் உடன் டூயட் பாடும் போது கூச்சமாக இருந்தது. 16 வருடங்களுக்கு முன் த்ரிஷா எப்படி இருந்தாரோ இன்றும் அப்படியேஇளமையாக உள்ளார். அவர் யோகா செய்கிறார். யோகா செய்தால் உடலும் மனதும் அழகா இருக்கும்.
குழந்தைக்கு வித்தியாசமான உடைகள் எல்லாம் போட்டு அழகு பார்ப்பார்கள். நான் ஒரு குழந்தை,என்னை அப்படி ரசித்து எடுத்துள்ளார் கார்த்திக் சுப்பராஜ்.
அவரின் கதை திறன் வித்தியாசமாக உள்ளது.
என்னை 80, 90களில் உள்ள ரஜினியை போல் காட்டியுள்ளார்கள்.
அனிருத்தான் அடுத்த ஏ.ஆர்.ரஹ்மான் என 3 படத்தில் பணியுரியும் போதேர தனுஷ் என்னிடம் சொன்னார்.
எக்ஸ்ட்ரா சாப்பாடு, எக்ஸ்ட்ரா தூக்கம், எக்ஸ்ட்ரா பேச்சு, எக்ஸ்ட்ரா அட்வைஸ் என எதுவாக இருந்தாலும் எக்ஸ்ட்ராவாக இருக்க கூடாது. அப்படி இல்லாமல் இருந்தால் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.
என்னுடைய பிறந்த நாள் வருகிறது. இநத் பிறந்தநாளின் போது சென்னையில் இருக்க மாட்டேன். யாரும் நேரில் வந்து ஏமாற வேண்டாம். ரசிகர்கள் யாரும் தவறாக எண்ண வேண்டாம்.
என ரஜினிகாந்த் பேசினார்.