2.0 ரிலீசுக்காக மகேஷ் பாபுவின் தியேட்டரை திறக்கும் ரஜினி

டோலிவுட் சினிமாவின் இளவரசர் என்று அழைக்கப்படுபவர் மகேஷ்பாபு.

இவர் ஏசியன் சினிமாஸ் உடன் இணைந்து ஐதராபாத்தில் பிரமாண்டமான திரையரங்க மால் ஒன்றை  நிறுவியுள்ளார்.

ஏஎம்பி சினிமாஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த திரையரங்கில் ரஜினியின் 2.0 படத்தை திரையிட மகேஷ் பாபு முடிவு செய்திருக்கிறாராம்.

அதனையொட்டி இந்த சினிமா தியேட்டர் மாலை திறந்து வைக்க ரஜினியை அழைத்திருக்கிறார்.

அந்த தியேட்டரை திறந்து வைப்பதால் அது 2.0 படத்திற்கான விளம்பரமாகவும் அமையும் என்பதால் ரஜினி இதில்கலந்துகொள்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன் அமீர்கான் படத்தை வெளியிட்டு அவரை திறந்த வைக்க அழைத்தாராம். ஆனால் அவர் வரவில்லை என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *