என்னையும் ரசிகர்களையும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது என ரஜினி அறிக்கை
நடிகர் ரஜினிகாந்த் தன் அரசியல் பிரவேசத்தை உறுதி செய்துவிட்டதால் தன் ரசிகர் மன்றங்களை மக்கள் மன்றமாக மாற்றி விட்டார்.
விரைவில் தன் அரசியல் கட்சி மற்றும் கொடியை அறிவிக்க உள்ளார்.
தற்போது மாவட்டந்தோறும் நிர்வாகிகளை நியமித்து வருகிறார்.
அப்போது சிலர் பணம், பதவிக்கு ஆசைப்பட்டு மன்ற விதிகளை மீறிய காரணத்தால் அவர்களை மன்றத்தில் இருந்து நீக்கினார் ரஜினி.
அதனையடுத்து அதற்கான காரணத்தை ஓர் அறிக்கையாக வெளியிட்டார் என்பதை நம் தளத்தில் பார்த்தோம்.
இதனால் வருந்திய ரசிகர்கள் அவரிடம் மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது-
இதனையடுத்து, அவர்களை மீண்டும் மக்கள் மன்றத்தில் இணைப்பது குறித்து, சென்னையில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார் ரஜினிகாந்த்.
அதன்பின்னர் இன்று ரஜினி வெளியிட்டுள்ள அறிக்கை கூறப்பட்டுள்ளதாவது…
நான் கடந்த 23ம் தேதி வெளியிட்ட அறிக்கையில் மக்கள் மன்ற செயல்பாடுகள் குறித்த சில உண்மைகளை சொல்லியிருந்தேன்.
அது கசப்பானதாக இருந்தாலும், அதில் உள்ள உண்மைகளையும், நியாயத்தையும் புரிந்து கொண்டதற்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
உங்களை போன்ற ரசிகர்களை நான் அடைந்ததற்கு பெருமைப்படுகிறேன். என்னையும், உங்களையும் யாராலும், எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது. நாம் எந்த பாதையில் சென்றாலும், அந்த பாதை நியாயமானதாக இருக்கட்டும். ஆண்டவன் நமக்கு துணை இருப்பான்.”
என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.