வழக்கமான அரசியலை செய்ய நாம் வரவில்லை.. ரசிகர்களுக்கு ரஜினி எச்சரிக்கை

கடந்த டிசம்பர் 31ஆம் தேதி தன் அரசியல் பிரவேசத்தை உறுதி செய்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

மேலும் தன் அடுத்த அதிரடியாக ரசிகர் மன்றங்களை மக்கள் மன்றமாக மாற்றி மாவட்டம் தோறும் நிர்வாகிகளை நியமித்து வருகிறார்.

ஒரு சிலருக்கு பதவி தரப்படாத காரணத்தாலும் மற்ற பிரச்சினைகளாலும் சிலர் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.

இதனால் ஒழுங்கு நடவடிக்கையின் மூலம் கட்சியை விட்டு நீக்கினார் ரஜினி. இது ரஜினிக்கே தெரியாமல் நடப்பதாக ரசிகர்களே குற்றம் சாட்டினர்.

இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் ரஜினி ஒரு பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில்…

மக்கள் மன்றத்தில் நடக்கும் அனைத்தும் என் பார்வைக்கு வருகிறது. என் அனுமதியில்லாமல் எதுவும் நடக்கவில்லை. நாம் மற்றவர்களை போல் வழக்கமான அரசியல் செய்ய வரவில்லை.

30, 40 ஆண்டுகள் ரசிகர் மன்றத்தில் இருந்தால் மட்டுமே பதவி தர முடியாது. அரசியலில் பதவி சுகத்துக்கும், பணம் சம்பாதிக்கும் எண்ணத்துடனும் வருபவர்களை என் பக்கத்தில் எப்போதுமே சேர்க்கமாட்டேன்.

பதவி சுகம் காணும் எண்ணத்தில் உள்ளவர்கள் இப்போதே விலகி விடுங்கள் என தன் ரசிகர்களுக்கும் மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும் ரஜினிகாந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *