2.0 பட சென்சாரில் கட் செய்யப்பட்ட வசனங்கள் இதோ…
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 2.0 திரைப்படத்தின் சென்சார் தகவல்கள் வெளியாகி உள்ளன.
2 மணிநேரம் 28 நிமிடங்கள் 52 நொடிகளுக்கு இப்படம் ஓடக்கூடியது.
இதுவரை ஷங்கர் இயக்கிய படங்களிலேயே இதுதான் மிகக்குறைந்த நேரம் படம் ஆகும்.
படத்தின் சென்சாரின் போது காட்சிகளில் பெரிய அளவில் கத்திரி வைக்கவில்லை.
ஆனால், வசனங்களில் நிறைய கட் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
‘யுனிசெல்’ என்ற நிறுவனத்தின் பெயரை எங்கெல்லாம் பயன்படுத்தியிருக்கிறார்களோ, அங்கெல்லாம் மாற்றச் சொல்லியிருக்கிறார்கள்.
மேலும் ‘புற்று நோய்,’ ‘கருச்சிதைவு’, ‘ஆண்மைக் குறைவு’, ‘லஞ்சம்’, ‘45 வருடம்’, ‘9’ என்ற வார்த்தையை ஆகிய வசனங்களை நீக்கச் சொல்லியிருகிறார்களாம்.