விஜய்யின் சர்கார் சாதனையை முறியடித்த 2.0 ரஜினிகாந்த்

ரஜினிகாந்த் நடித்த 2.0 திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது.

ஷங்கர் இயக்கிய இப்படத்தை லைகா நிறுவனம் ரூ.550 கோடியில் உருவாக்கியது.

அனைத்து தரப்பு மக்களையும் இப்படம் கவர்ந்துள்ளது.

இந்நிலையில் சென்னையில் மட்டும் ரூ. 2.64 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இது காலா, சர்கார், மெர்சல், விவேகம் ஆகிய பட வசூல்களை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

தீபாவளி தினத்தில் வெளியான விஜய்யின் சர்கார் படம் சென்னையில் முதல் நாள் ரூ. 2.37 கோடி மட்டுமே வசூலித்து உள்ளது.

ஆனால் 2.0  படம் எந்த பண்டிகையும் இல்லாத நாளில் வெளியாகி அந்த சாதனையை முறியடித்துள்ளது என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published.

fourteen + 17 =