ரஜினியின் பேட்ட திரைப்படம் 2019 பொங்கல் தினத்தில் ரிலீஸ்

காலா படத்தை அடுத்து ரஜினி அரசியலில் இறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென தன் அடுத்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்குவார் என அறிவித்தார்.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க, அனிருத் இசையமைப்பார் என அறிவித்தனர்.

சில தினங்களுக்கு பின் இப்படத்திற்கு பேட்ட என பெயரிட்டு மோசன் போஸ்டரை வெளியிட்டனர்.

இப்படத்தில் ரஜினியுடன் டைரக்டர் மகேந்திரன், சசிகுமார், விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, சிம்ரன், த்ரிஷா, நவாசுதீன் சித்திக், மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இன்று சற்றுமுன் பேட்ட படத்தின் ரிலீஸ் தேதி சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளனர்.

2019 பொங்கலுக்கு பேட்ட பராக் என அறிவித்துள்ளனர்.

அறிவிப்பு போஸ்டரில் ரஜினியுடன் சிம்ரன் இருக்கிறார்.

 

Leave a Reply

Your email address will not be published.

eleven − 11 =