20 வருடங்களுக்கு பிறகு ஜப்பானில் ரீ-ரிலீசாகும் ரஜினியின் முத்து
இன்றைக்கு ரஜினி அவர்களுக்கு உலகளவில் ரசிகர்கள் இருந்தாலும் அந்த ரசிகர் வட்டம் முதன்முறையாக எப்படி உருவானது என்று தெரியுமா..?
ரஜினி, மீனா இணைந்து நடித்த முத்து படம் தான் முதன்முறையாக ஜப்பான் நாட்டில் ரஜினிக்கான ரசிகர்களை உருவாக்கியது.
கவிதாலயா தயாரிப்பில் ஏஆர். ரஹ்மான் இசையமைத்த இப்படம் 1995ம் ஆண்டில் தமிழில் வெளியானது.
இப்படத்தில்தான் முதன்முறையாக ரஜினியை கே.எஸ். ரவிக்குமார் இயக்கியிருந்தார்.
அதன் பின்னர் ஜப்பான் மொழியில் சப்-டைட்டிலிங் செய்யப்பட்டு 1998ல் முத்து – ஒடோரு மகாராஜா – டான்சிங் மகாராஜா என்ற பெயரில் வெளியானது.
இந்நிலையில் தற்போது முத்து படம் டிஜிட்டலில் மாற்றம் செய்யப்பட்டு நவம்பர் 23ம் தேதி மீண்டும் வெளியாகிறது.
முத்து படம் ஜப்பானில் வெளியாகி 20 வருடங்கள் ஆனதை முன்னிட்டு ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் நவம்பர் 23ம் தேதியன்று மீண்டும் வெளியிட உள்ளனர்.
டிஜிட்டலில் 4 கே மற்றும் 5.1 சரவுன்ட் ஒலியமைப்பில் இப்படத்தைத் திரையிட உள்ளனர்.