பேட்ட ரஜினி வருகையால் பொங்கல் ரேஸில் விலகும் விஸ்வாசம் அஜித்
ஓரிரு தினங்களுக்கு முன் பேட்ட படத்தின் சூட்டிங்கை வாரணாசியில் முடித்துவிட்டு ரஜினிகாந்த் சென்னை திரும்பியுள்ளார்.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க அனிருத் இசையமைத்து வருகிறார்.
சூட்டிங் முடிவடைந்ததை முன்னிட்டு இதன் போஸ்ட் புரொடக்சன் பணிகளை படக்குழு தீவிரப்படுத்தியுள்ளது.
விரைவில் டப்பிங் உள்ளிட்ட பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே 2019 பொங்கல் தினத்தில் பேட்ட படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
ரஜினி படங்கள் ரிலீஸானால் அன்றைய தினம் வேறு படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்காது.
எனவே பொங்கலுக்கு திட்டமிடப்பட்டுள்ள அஜித்தின் விஸ்வாசம் பொங்கல் ரேஸில் இருந்து விலகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.