நவம்பர் 14ஆம் தேதி தீபிகா படுகோன்-ரன்வீர் சிங் திருமணம்
ராணி பத்மினியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட பத்மாவத்.
பல பிரச்சினைகள் தாண்டி வெளியான இப்படம் மாபெரும் வெற்றிப் பெற்றது.
இதில் ராணியாக நடித்த பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே அதே படத்தில் தன்னுடன் நடித்த ரன்வீர் சிங்கை காதலித்து வந்தார்.
இந்நிலையில் தற்போது இருவரும் திருமணம் செய்துக் கொள்ள முடிவெடுத்துள்ளனர்.
அவர்களின் திருமண அழைப்பிதழை இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.
‘எங்கள் குடும்பாத்தாருடன் ஆசிகளுடன் எங்கள் திருமணம் நவம்பர் 14,15 தேதிகளில் நடைபெறும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
இத்தனை காலமாக எங்கள்மீது நீங்கள் தொடர்ந்து காட்டிவரும் அன்புக்கு நன்றி தெரிவிப்பதுடன், இந்த வாழ்க்கையை தொடங்கப் போகும் எங்களை ஆசீர்வதிக்க வேண்டுகிறேன் ’ என தீபிகா படுகோனேபதிவிட்டுள்ளார்.