பேட்ட’ மரண மாஸ்; புதிய சாதனை படைக்கும் என ‘ரெட் ஜெயன்ட்’ கருத்து

‘பேட்ட’ மரண மாஸ்.; ரெக்கார்டு பிரேக் செய்யும் என ரெட் ஜெயன்ட் கருத்து

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான படம் ‘பேட்ட’.

இதில் ரஜினிகாந்துடன் சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, நவாசுதீன் சித்தக்கி, சசிகுமார் உள்ளிட்டோர் நடிக்க அனிருத் இசையமைத்திருந்தார்.

இப்படத்தை தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, வட ஆற்காடு, தென் ஆற்காடு, சேலம் மற்றும் மதுரை ஆகிய இடங்களில் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட்டது.

இப்படத்தை விட ‘விஸ்வாசம்’ வசூல் அதிகம் என சிலர் கூறி வருவதால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ‘பேட்ட’ படம் குறித்து ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் செண்பகமூர்த்தி தெரிவித்திருப்பதாவது:

பேட்ட படத்தை அனைத்து தரப்பு மக்களும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

எங்களுடைய பட வெளியீட்டு வசூலில் ‘பேட்ட’ தான் முதலிடம்.

‘பேட்ட’ பட வசூல் அனைத்து ரெக்கார்டுகளையும் உடைக்கும்.” எனத் தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published.

ten − 2 =