சாமி² – திரை விமர்சனம்

சாமி² திரை விமர்சனம்

நடிகர்கள்:  விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், சூரி, பிரபு, ஜான் விஜய், சுந்தர், சூரி, சஞ்சீவ், இமான் அண்ணாச்சி, உமா ரியாஸ்கான்
இசை  – தேவி ஸ்ரீபிரசாத்
ஒளிப்பதிவு – ப்ரியன்,
எடிட்டிங் – வி.டி.விஜயன்
மக்கள் தொடர்பாளர் – யுவராஜ்
டைரக்சன் – ஹரி
தயாரிப்பு – ஷிபு தமீன்ஸ்

கதைக்களம்…

மாபெரும் வெற்றி பெற்ற சாமி படத்தின் தொடர்ச்சியாக இப்படம் சாமி ஸ்கொயர் உருவாகியுள்ளது.

முதல் பாகத்தில் வில்லன் பெருமாள் பிச்சையை போலீஸ் ஆறுச்சாமி கொன்றுவிடுவார். ஆனால் அவர் காணாமல் போனதான செய்திகள் வெளியானதாக படம் முடியும்.

பெருமாள் பிச்சை என்ன ஆனார்? என்கிற கேள்வியுடன் அவரது 3 மகன்கள் (ஜான் விஜய், சுந்தர், பாபி சிம்ஹா) இலங்கையிலிருந்து திருநெல்வேலி வருகின்றனர்.

அப்போதுதான் தன் தந்தையை ஆறுச்சாமி கொன்றுவிட்டார் என்ற விவரம் தெரிய வருகிறது.

அதன்பின்னர் ஆறுச்சாமியின் குடும்பத்தை அடியோடு கொன்றுவிடுகிறார். ஆனால் ஆறுச்சாமியின் மகன் ராமசாமி டெல்லியில் வளர்கிறார்.

ஒரு சூழ்நிலையில் பாபி சிம்ஹாவின் அட்டகாசங்களும் தன் தந்தையை கொன்றவர்களின் விவரமும்  ராமசாமிக்கு தெரிகிறது.

அவர்களை பழிவாங்க ராமசாமி என்ன செய்தார்? அவரும் போலீஸ் ஆனாரா? எப்படி அவர்களை வீழ்த்தினார்? என்பதே மீதிக்கதை.

கலைஞர்களின் நடிப்பு எப்படி..?

முதல் பார்ட்டில் ஆறுச்சாமி கேரக்டரில் சிக்சர் அடித்த விக்ரம் இதிலும் குறை வைக்கவில்லை. அதே முறுக்கு மீசையுடன் வில்லன்களை துவம்சம் செய்கிறார்.

10 வருடங்களை தாண்டி இந்த படம் வந்தாலும் அதே பாடி லாங்குவேஜ் உடன் மிரட்டியிருக்கிறார் ராமசாமி. ஆனால் முதல் பார்ட்டில் த்ரிஷா மாமியுடன் செம ரொமான்ஸ் செய்திருந்தார். இதில் கீர்த்தியுடனும் கெமிஸ்ட்ரி இல்லை. ஐஸ்வர்யாவுடனும் கெமிஸ்ட்ரி இல்லை.

நாயகிகள் இரண்டு பேர். இதில் மடிசார் மாமியாக ஐஸ்வர்யா ராஜேஷ். ஆனால் த்ரிஷா அளவில் ஒரு துளிகூட இல்லை.

ஐஸ்வர்யா சிறந்த நடிகைதான். ஆனால் மாமி வேடத்துக்கு பொருத்தமில்லை.

சென்ட்ரல் மினிஸ்டர் பிரபுவின் மகளாக கீர்த்தி சுரேஷ் வருகிறார். ஆடி பாடி டூயட் பாடுகிறார். மாமி பாஷையை ஒரு காட்சியில் ட்ரை செய்திருக்கிறார். அதுவும் ஒட்டவில்லை.

மெட்ரோ ரயில் பாடலை தன் சொந்த குரலில் படித்திருக்கிறார். எதற்கு இந்த விஷப்பரிட்சை.?

படத்தில் மிகப்பெரிய ஏமாற்றம் சூரி. காமெடி என்ற பெயரில் செம கடி. சிக்ஸ் பேக் வச்சீங்க.. ஓகே காமெடி பேக் இனிமே மிஸ் பண்ணீடாதீங்க.

பாபி சிம்ஹாவுக்கு மிரட்டலான வில்லன் வேடம். கண்கள் மற்றும் உடம்பு, நரம்புகளில் வெறி ஏற்றி நடித்திருக்கிறார். கீப் இட் அப் ப்ரோ.

இவர்களுடன் டெல்லி கணேஷ், சுமித்ரா, பிரபு, ஜான் விஜய், ஓ.கே.சுந்தர், சஞ்சீவ், இமான் அண்ணாச்சி, உமா ரியாஸ் கான், சுதா சந்திரன், ஐஸ்வர்யா ஆகியோரும் உண்டு. இவர்களின் கேரக்டர்களில் வலுவில்லை.

இதர தொழில்நுட்ப கலைஞர்கள் எப்படி..?

தேவி ஸ்ரீபிரசாத் இசையில் பின்னணி இசை தெறி. சேஷிங் சீன்களில் வேகம் காட்டியுள்ளார். ஆனால் பாடல்கள் தான் கை கொடுக்கவில்லை.

சாமி முதல் பார்ட்டில் இதுதானா இதுதானா என்ற அழகான பாடல் இருக்கும். இதில் எதுவுமே இல்லை. மிளகாய் பொடி முதல் டர்னக்கா வரை ஏமாற்றம்தான்.

பெரும்பாலும் டாடா சுமோ கார்களின் அதிரடி பாய்ச்சல் இருக்கும். இதில் எக்ஸ்ட்ராவாக பாலைவனத்தில் ஒட்டக சேஷிங் இருக்கிறது. அந்த காட்சிகள் சிறப்பு.

முதல் பார்ட்டில் இருந்த மாமி ரொமான்ஸ், சென்ட்டிமெண்ட், விவேகம் இதில் குறைவு.

பொதுவாக தாய் 8 அடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும் என்பார்கள். இதில் பாய்ச்சல் குறைவே. மற்றபடி ஹரியின் வழக்கமான பார்முலாவின் ஒரு படம்.

சாமி ஸ்கொயர்… சாமி வேட்டையில் வேகம் மட்டுமே உள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *