இனி அனைத்து வயது பெண்களும் சபரிமலை செல்லாம்

கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் அனைத்து பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியிருக்கிறது.

கடளவுளை வணங்குவதில் ஆன்பெண் பரபட்சம் பார்க்க கூடாது. மதத்தின் ஆணாதிக்க தன்மையை அனுமதிக்க முடியாது. ஐயப்ப பக்தர்களுக்கு என தனி மனித அடையாளம் இல்லை . ஆண்களை விட பெண்கள் எந்த விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் இந்த  தீர்ப்பில் இடம்பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா, சந்திரசூட்,  நாரிமன், கான்வில்கர்   உள்ளிட்ட நான்கு நீதிபதிகள் ஐய்யப்பன் கோவிலுக்குள் அனைத்து பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கின்றனர்.

ஐந்தாவது நீதிபதியான இந்துமல்ஹோத்ரா மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியிருக்கிறார்.

1991ல் தான் முதல் முதலாக சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று வழக்கு தொடுக்கப்பட்டது. எஸ். மஹாதேவன் என்ற நபர் கேரளா ஹைகோர்ட்டில் இந்த வழக்கை தொடுத்து இருந்தார். அதே வருடம் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இது மத நம்பிக்கையின் படியும், கேரள கோவில்கள் வகுத்த விதியின் படியும், சபரிமலை தேவஸ்தான விதியின் படியும் இது சரியானது என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

2006ல் இந்த விவகாரத்தில் ஒரு முக்கியமான சம்பவம் நடந்தது. பிரபல சாமியார் ஒருவர் இந்த கோவிலில் பூஜை நடத்தினார். பூஜைக்கு முடிவில் இந்த கோவிலுக்குள் வயது வந்த பெண் ஒருவர் முன்பு வந்து உள்ளார். அதற்கான அறிகுறி இருக்கிறது என்று கூறினார்.

2006ல் சில மாதங்கள் கழித்து பிரபல கன்னட நடிகை ஜெயமாலா சபரிமலை கோவிலுக்குள் 1987ல் 28 வயது இருக்கும் போது வந்ததாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். படப்பிடிப்பிற்காக வந்ததாகவும், முழு அனுமதியுடன் வந்தேன் என்றும் குறிப்பிட்டார். 2006ல் இந்த பிரச்சனை பெரிய பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து விசாரிக்க கேரள கிரைம் பிரிவிற்கு உத்தரவு பிறப்பித்தது அம்மாநில அரசு. ஆனால் சில மாதங்களில் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

அதே வருடம் இறுதியில் கேரளாவை சேர்ந்த இளம் வழக்கறிஞர்கள் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தது. சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று வழக்கு தொடுத்தது. இந்த வழக்கு இரண்டு வருட காத்திருப்பிற்கு மார்ச் 7ம் தேதி 2008ம் ஆண்டு மூன்று நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்விற்கு சென்றது.

ஆனால் அதன்பின் ஏழு வருடம் இந்த வழக்கு விசாரிக்கப்படவில்லை. எந்த விதமான முன்னேற்றமும் இல்லாமல் வழக்கு கிடப்பில் போடப்பட்டது. 2016 ஜனவரி 11ம் தேதிதான் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது.

2017ம் ஆண்டு இந்த வழக்கு பிப்ரவரி மாதம் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு அரசியல் சாசன அமர்விற்கு மாற்றப்பட்டது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் நாரிமன், சந்திரசூட், கான்வில்கர், இந்து மல்ஹோத்ரா அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. இந்த வழக்கு விசாரணையில் கடந்த இரண்டு மாதம் முன், கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம் என்று அம்மாநில அரசு தெரிவித்தது. ஆனால் கோவில் நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்தது. கடைசியாக சென்ற மாதம் இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து.

இந்நிலையில் இன்று உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பை அளித்தது. அதில் 5 நிதிபதிகளில் 4 நான்கு நீதிபதிகள் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை அளித்திருக்கின்றனர். அந்த தீர்ப்பின் படி அனைத்து வயது பெண்களையும் ஐய்யப்பன் கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும். ஆண் பெண் என்ற பாரபட்சம் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் இடபெற்றிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *