பூத சுத்தி விவாஹா -உடல், மன அளவில் தோழமை என்பதைத் தாண்டி இருவருக்கிடையே சங்கமம் நிகழும்போது அங்கே அழகானதொரு சக்திசூழல் உருவாகும்

பழங்காலத்தில் பலருக்கும், “என் கணவன் (அ) மனைவி இறந்துவிட்டால், நானும் இறந்துவிடுவேன்” என்பதுபோன்ற உணர்வு இருந்தது. ஆனால் அந்தக் காலமெல்லாம் மலையேறிவிட்டது. இன்று, அவருக்குப் பிடிக்காத ஏதோவொன்றை நீங்கள் செய்தாலும், அவர் விட்டுச் சென்றுவிடுவார். இதுபோன்ற உலகில் நிரந்திரப் பிணைப்பை ஏற்படுத்தக் கூடாது. இந்தப் பிணைப்பு எந்தளவிற்கு இருக்கவேண்டும் என்றால், ஏதோ நாளை காலை டூத்பேஸ்ட்-ல் சண்டை வருகிறது என்று வைத்துக் கொள்வோம். அதுபோன்ற சண்டைகளை எல்லாம் தாக்குப்பிடிக்கும் அளவிற்கு இந்தப் பிணைப்பு இருக்கவேண்டும். ஆனால் அதேசமயம், எதிர்பாராத விதத்தில் ஏதோவொரு சூழ்நிலை ஏற்பட்டால், சிறிதளவு முயற்சிசெய்தாலே அந்தப் பிணைப்பை விடுவிக்கவும் முடியவேண்டும்.

விவாஹா என்பது இரு ஜீவன்களை இயற்கை முறையில் பிணைக்கும் ஒரு செயல்முறை. இந்த செயல்முறையில் “சங்கமம்” என்பதை அவர்கள் ஓரளவிற்கு உணரமுடியும். இதை அடிக்கல்லாய் வைத்து இன்னும் உயரிய அளவில் அவர்கள் சங்கமத்தை உணரும் வாய்ப்பும் இருக்கிறது.

இன்றைய சமூக நிதர்சனங்களை கருத்தில் கொண்டு, இந்த செயல்முறை பற்றியும், இதன் மூலம் எந்தளவிற்கு இருவரை பந்தத்தில் இணைக்க முடியும் என்பதையும், இந்த பந்தமே ஒரு படிக்கல்லாக அமையும் சாத்தியம் பற்றியும் சத்குருவின் பார்வை….

https://isha.sadhguru.org/in/ta/wisdom/sadhguru-spot/vivaha-kalyana-panthalil-iruvarai-inaikkum-seyalmurai

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *