நதிகளை மீட்போம் திட்டத்தின் நோக்கங்கள்

#நதிகளை_மீட்போம் திட்டத்தின் மூன்றாவது தேசிய செயற்குழு கூட்டம் நேற்று முன்தினம் பெங்களூரில் நடந்தது.

இந்த குழுவில் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் திரு.பி.முத்துராமன் அவர்களும் இணைந்துள்ளார்.

இக்கூட்டத்தில் வரவிருக்கும் 6 மாத கட்டத்தில் உடனடி நடவடிக்கைகளான 6 திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

1.காவேரி பகுதியில் பெரிய அளவிலான வனப்பாதுகாப்பு திட்டம்.

2.வைகை நதிக்கு புத்துயிர் கொடுப்பது.

3.விவசாய உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு மறுசீரமைப்பு செய்தல்.(FPO)

4.பெரிய அளவிலான மைக்ரோ பாசன திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்.

5.கிராமப்புற மக்கள் நகரங்களுக்கு இடம்பெயர்வு செய்யாதவாறு மாதிரி கிராமங்களை உருவாக்குதல்.

6.ஆறு மாநிலங்களின் நதிக் கரையில் விரிவான திட்ட அறிக்கைகள்.

இக்கூட்டத்தில் #சத்குரு பேசும் போது..

“அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாம் விவசாயத்தை லாபகரமாக செய்யாவிட்டால்,சேற்றை உணவாக மாற்றும் தொழில்நுட்பத்தை அறிந்த ஒரு மக்கள்தொகை இல்லாமல் போகும் நிலைமையை எதிர்கொள்வோம். அவர்களை நிச்சியம் பாதுகாக்க வேண்டும் என்றார்.

நதிகளை மீட்போம் திட்டத்தின் அடுத்த தேசிய செயற்குழு கூட்டம் வரும் டிசம்பர் 2018ல் கூட இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published.

fourteen + three =