சினிமாவுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் கறுப்பு ஆடுகளுக்கு சமந்தா கண்டனம்

தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளிலும் கலக்கி வருபவர் நடிகை சமந்தா.

இவரது நடிப்பில் அண்மையில் வெளியான யுடர்ன் படம் அனைத்து தரப்பினராலும் ரசிக்கப்பட்டது.

இந்நிலையில் மதுரையில் ஒரு செல்போன் கடை திறப்பு விழாவிற்காக சென்றிருந்தார் சமந்தா.

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் சமந்தா பேசியதாவது…

எனது வெற்றிக்கு ரசிகர்களே முக்கிய காரணம். அவர்கள் இல்லாமல் நானில்லை. சில நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள். அவர்களுக்கு வாழ்த்துகள்.

10 ஆண்டுகளாக சினிமாவில் இருக்கிறேன். எனக்கு எந்த குறையும் இல்லை.

சிலர் பாலியல் ரீதியான தொல்லைகளை சந்திக்கிறார்கள். எனக்கு தொல்லைகள் இல்லை.

எல்லா துறையிலும் இருப்பது போலவே சினிமா துறையிலும் ஒரு சில கருப்பு ஆடுகளால் இதுபோன்றதொல்லைகள் ஏற்படுகிறது.

அவர்களால் சினிமா துறைக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது.” என்றார்.

Leave a Reply

Your email address will not be published.

18 + two =