சண்டக்கோழி 2 திரை விமர்சனம்

நடிகர்கள்:  விஷால், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராஜ்கிரண், சண்முகராஜன், அப்பாணி சரத், மாரிமுத்து, ‘மெட்ராஸ் ஜானி’ ஹரி, முனீஷ்காந்த், கஞ்சா கருப்பு, ஹரீஷ் பெராடி மற்றும் பலர்.
இசை  – யுவன் சங்கர் ராஜா
இயக்கம் – லிங்குசாமி

ஒளிப்பதிவு – சக்திவேல்
எடிட்டர் – பிரவீன்

தயாரிப்பு – விஷால்

கதை என்ன..?

படத்தின் கதை என்ன? என்பதை வாய்ஸ் ஓவரில் சொல்லிவிட்டார் நடிகர் கார்த்தி. அவரின் குரல் ஓசையுடன் படம் தொடங்குகிறது.

7 வருடங்களுக்கு முன் ஒரு சின்ன தகராறில் கோயில் திருவிழா நின்று போகிறது.

எனவே ஊர் பெரியவரான ராஜ்கிரண், தன் மகன் விஷால் துணையுடன் அந்த விழாவை நடத்த முற்படுகிறார்.

விழா நடப்பதில் பிரச்சினை இல்லை. ஆனால் விழா நடக்கும்போது என் சத்தியம்படி 7 வருடத்திற்கு தன் கணவனை வெட்டிய குடும்பத்தை சேர்ந்தவனை நிச்சயம் அதே ஊர் திருவிழாவில் வெட்டுவேன் என்கிறார் வரலட்சுமி.

விழா நடந்ததா? வரலட்சுமி பழி தீர்த்துக் கொண்டாரா? விஷால் தன் ஊரை சேர்ந்த நபரை காப்பாற்றினாரா? ராஜ்கிரண் வாக்கை காப்பாற்றினாரா? என்பதே மீதிக்கதை.

யார்? எப்படி நடித்துள்ளார்கள்..?

13 வருடத்திற்கு முன்பு சண்டக்கோழி 1 படம் வெளியானது. அதில் பார்த்த விஷால் உருவத்தை அப்படியே பார்க்க முடிகிறது. தற்போது நடிப்பில் இன்னும் மெச்சூரிட்டி அதிகரித்துள்ளது. ஆக்சன் காட்சிகளில் அனல் பறக்கிறது.

கீர்த்தியுடன் ரொமான்ஸ் அவ்வளவாக இல்லை என்றாலும் கிராமத்து திருவிழா காட்சிகள் ரசிக்க வைக்கிறது.

முதல் பார்ட்டில் மீரா ஜாஸ்மின் கலக்கியிருப்பார். அவர் என்ன ஆனார்? என்பதை லிங்கு ஓரிரு வார்த்தையில் சொல்லிவிட்டார்.

கிராமத்து வாயாடி பெண்ணாக கீர்த்தி சுரேஷ். விஷாலை கலாய்ப்பதில் தொடங்கி குத்தாட்டம் போட்டு ரசிக்க வைக்கிறார்.

உன்ன கட்டிக்கிறேன். அவன வச்சிக்கிறேன்… ஆமா நேத்துதான் புள்ள பொறந்துச்சி என செம்பருத்தியாக மணக்கிறார். ஆனால் இவரது பாஷைதான் செயற்கைத்தனமாக அமைந்துவிட்டது. முயற்சிக்கு பாராட்டுக்கள்.

அழகான அதே சமயம் மிரட்டல் வில்லியாக வரலட்சுமி. க்ளைமாக்ஸ் பைட்டில் இன்னொரு காஞ்சனாவாக சிவப்பு கலர் சேலையில் மிரட்டியிருக்கிறார். இனி வில்லி வாய்ப்புகள் வர வாய்ப்புள்ளது.

ஊர் பெரியவர், கம்பீரமான கேரக்டர் என்றால் இவரை மிஞ்ச ஆளில்லை. இந்த வயதிலும் கிராமத்து ராஜாவாக ராஜ்கிரண் மின்னுகிறார்.

இவர்களுடன் பவன், கஞ்சா கருப்பு, முனீஸ்காந்த், சண்முகராஜன், அப்பாணி சரத், மாரிமுத்து, ‘மெட்ராஸ் ஜானி’ ஹரி, ஹரீஷ் பெராடி ஆகியோர் தங்கள் பணிகளில் நிறைவை தந்துள்ளனர்.

ப்ளஸ் என்ன..?

கம்பத்து பொன்னு, சூரியனும் பாடல்கள் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசையில் கிராமத்து காட்சிகள் அதிர வைக்கின்றன.

சக்திவேலின் ஒளிப்பதிவு படம் முழுவதும் திருவிழா கண்ட உற்சாகத்தை ஏற்படுத்துகிறது. எடிட்டர் பிரவின் அவர்களின் படத்தொகுப்பு கச்சிதம்.

மைனஸ் என்ன…?

ராஜ்கிரண் படுத்த படுக்கையாக இருக்கும்போது விஷால் செய்யும் காட்சிகள் நம்பும் படியாக இல்லை. முக்கியமாக முனீஷ்காந்த் போடும் வேஷம், திருவிழாவில் கடை நாளில் அவர் வந்து நிற்கும் வேகம் நம்ப முடியவில்லை.

மீரா ஜாஸ்மின் கேரக்டரை மிஸ் செய்த உணர்வு வருகிறது.

லிங்குசாமி படம் என்றாலே குடும்ப கதைக்கு எப்போதும் லிங்க் இருக்கும். அதை லிங்க் இதிலும் மிஸ் ஆகாமல் இருக்கிறது.

ஆனால் இடைவேளைக்கு வரை இருந்த விறுவிறுப்பு 2ஆம் பாதியில் இல்லை.

சண்டக்கோழி2… வேகமில்லாத விஷாலின் 25வது படம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *