இன்று திரைப்படத் தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்பா தேவர் நினைவு தினம்

திரைப்படத் தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்பா தேவர் நினைவு தினம் செப்டம்பர் 8., 1978.

சாண்டோ சின்னப்பா தேவர் என அழைக்கப்படும் எம். எம். ஏ. சின்னப்பா தேவர் 1960- 1970 களில் புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளரும் நடிகரும் ஆவார். பட அதிபராக உயர்ந்தவர் எம்.எம்.ஏ. சின்னப்பா தேவர்.

எம்.ஜி.ஆரை நடிப்பில், குறுகிய காலத்தில் பல வெற்றிப் படங்களை தயாரித்தவர்.

தனது படங்களில் விலங்குகளை நடிக்க வைத்தவர். எம். ஜி. ராமச்சந்திரன் இவருடைய 17 படங்களில் கதாநாயகராக நடித்தார்.

தேவர் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி பல வெற்றிப்படங்களைத் தந்தவர்;

மொழி தெரியாத போதும் இந்தித் திரையுலகில் பிரபல நடிகர் ராஜேஷ் கன்னா நடிப்பில் ’’ஹாத்தி மேரே சாத்தி’’ என்ற வெற்றிப்படத்தை 1971-ல் வழங்கினார்.

ஜெமினி எஸ்.எஸ்.வாசன், ஏவி. மெய்யப்ப செட்டியார், விஜயா வாகினி நாகிரெட்டியார், மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம், பட்சி ராஜா ஸ்டூடியோ அதிபர் ஸ்ரீராமுலு நாயுடு ஆகியோர் கொடி கட்டிப் பறந்த காலத்தில், தமிழ்த் திரையுலகில் தடம் பதித்து அவர்களுக்கு இணையாக பல வெற்றிப் படங்களைத் தயாரித்து, திரை உலகை வியக்க வைத்தவர் எம் எம் ஏ சின்னப்பா தேவர்.

படத்திற்கு பூஜை போட்டுவிட்டால் அறுபதே நாட்களில் படத்தை திரைக்கு கொண்டு வருவதை தனது கொள்கையாகவே வைத்திருந்தார் தேவர்.

படம் பார்க்க வரும் மக்களுக்கு என்ன பிடிக்கும் என்பதை தன் அனுபவத்தாலேயே உணர்ந்து, அதற்க்கேற்ற வகையில் தனது படங்களின் கதையை அமைக்க சொல்வார் தேவர்.

“ஏழை மக்களுக்காகவும் குழந்தைகளுக்காகவுமே எனது படங்கள்.. கதைய எளிமையா சொல்லுங்கடா..” என்று தன் கதை இலாகாவையே பாடாய்ப்படுத்தியர் தேவர்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *