நான் முதல்வரானால்…சர்கார் விழாவில் விஜய் சரவெடி பேச்சு

சன் டிவி, விஜய், ஏஆர்முருகதாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் சர்கார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது.

நடிகர் பிரசன்னா இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

இசை வெளியீட்டு தயாரிப்பாளர் கலாநிதிமாறன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இதில் விஜய்யின் பேச்சு பரபரப்பாக இருந்தது.

கலையை வளர்க்க வேண்டும் என்பதற்காக நிதியை அள்ளி வழங்கி வருகிறார் கலாநிதிமாறன். அவர் பேரிலேயே நிதி இருக்கிறது.

ஏ.ஆர்.ரஹ்மான் எங்கள் சர்கார் படத்தில் கிடைத்தது எங்களுக்கு ஆஸ்கர் கிடைத்தது மாதிரி இருக்கு.

யோகி பாபுவின் அசுர வளர்ச்சியை பார்க்கும்போது வியப்பாக இருக்கிறது.

அரசியல்வாதி பழ.கருப்பையாவுடன் சேர்ந்து நடித்ததை கௌரவமாக நினைக்கிறேன்.

கீர்த்தி சுரேஷுக்கு வாழ்த்துகள். பழம்பெரும் நடிகை சாவித்ரியை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தினார்.

வரலட்சுமி இந்த நடிப்பது படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பின் போது தான் தெரியும். வர்ர லட்சுமிய ஏன் வரக்கூடாது என்று சொல்ல வேண்டும்.

வெற்றிக்காக எவ்வளவு வேண்டுமானால் உழைக்கலாம். வெற்றி பெற்றுவிடக் கூடாது என்பதற்காக ஒரு கூட்டம் உழைத்துக் கொண்டிருக்கிறது.

எல்லாரும் அரசியலில் நின்று ஜெயித்து சர்கார் அமைப்பாங்க. ஆனால் நாங்க சர்கார் அமைத்துவிட்டு தேர்தலில் நிற்க போகிறாம். நீங்க படம் பார்த்து ஓட் போடுங்க என்றார். (ரசிகர்கள் ஆரவாரம்  செய்தனர். சர்கார் பட ரிலீஸ் பற்றி சொன்னேன் என்றார்.)

முதலமைச்சரானால் நீங்கள் மாற்ற வேண்டிய முதல் விஷயம் என்னவாக இருக்கும் என்று பிரசன்னா கேட்டார்.

லஞ்சம், ஊழலை ஒழிப்பேன் என்று கூறினார். லஞ்சம் ஊழல் எல்லாம் ஒழிக்க பாடுபடுவேன்.

மேல்மட்டத்திலிருக்கும் அரசியல் தலைவர்கள் சரியாக இருந்தால் தவறுகள் நடக்காது. நான் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. தர்மம் தான் ஜெயிக்கும். ஆனால் கொஞ்சம் லேட்டா ஜெயிக்கும். ஒரு நெருக்கடியான சூழ்நிலை வரும் போது நல்லவர்கள் பொது வெளிக்கு வருவார்கள்” என்று பரபரப்பாக பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *