சர்கார் சமரசம்; டைட்டிலில் வருண் பெயர் போட முருகதாஸ் சம்மதம்

ஏஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி நடித்துள்ள  சர்கார் திரைப்படம் தீபாவளி தினத்தன்று நவம்பர் 6ஆம் தேதி வெளியாகிறது.

ஏஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

இந்நிலையில் இயக்குனர் முருகதாஸ் தன் கதையை திருடியதாக உதவி இயக்குநர் வருண் என்ற ராஜேந்திரன் என்பவர் புகார் செய்திருந்தார்.

இதனையடுத்து ‘செங்கோல்’ மற்றும் ‘சர்கார்’ ஆகிய இரண்டு கதைகளுமே ஒன்று தான் என்று தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.பாக்யராஜ் அவர்களும் தெரிவித்து இருந்தார்.

இதனால் முருகதாஸ் மற்றும் பாக்யராஜ் இடையே மோதல் உருவானது.

இதற்கு சம்மதம் தெரிவிக்காத முருகதாஸ், பிரச்னையை நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்வதாகக் கூற இந்த கதை திருட்டு சர்ச்சை பெரிதானது.

வருண் ராஜேந்திரன் இதை வழக்காக பதிவு செய்ய, 30ம் தேதி (இன்று ) வழக்கு விசாரணைக்கு வந்தது.

இதனையடுத்து இப்பிரச்னை கோர்ட்டுக்கு வர தற்போது, இருதரப்பும் பேசியதில், சமரசம் எட்டப்பட்டு பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது.

வருண் என்ற ராஜேந்திரனுக்கு 30 லட்ச ரூபாய் பணம் தந்துவிடுவதாகவும், படத்தின் டைட்டிலில் நன்றி என சொல்வதாகவும் முருகதாஸ் தரப்பு, வருண் ராஜேந்திரனிடம் பேசியதையொட்டி சமரசம் ஏற்பட்டுவிட்டுள்ளது.

ஆக, இதன் மூலம் இயக்குனர் முருகதாஸ் கதை திருடியது அம்பலமாகியுள்ளது.

சில வருடங்களுக்கு முன் விஜய் நடித்த கத்தி படத்திற்கும் இதுபோன்ற திருட்டு கதை வழக்கில் சிக்கினார் முருகதாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *