மீண்டும் விஜய்யுடன் இணைந்து நடிக்கும் ஏஆர். முருகதாஸ்

கத்தி மற்றும் துப்பாக்க்கி படங்களை தொடர்ந்து 3வது முறையாக ஏஆர். முருகதாஸ், விஜய் கூட்டணி இணைந்துள்ள படம் சர்கார்.

ஏஆர். ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, யோகிபாபு, ராதாரவி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இப்படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் இந்தாண்டு தீபாவளிக்கு இப்படத்தை வெளியிட உள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தில் விஜய்யுன் இணைந்து ஒரு பாடலுக்கு முருகதாஸ் நடனம் ஆடியுள்ளார்.

அந்த படங்களை தயாரிப்பு குழு வெளியிட்டுள்ளது.

ஏற்கெனவே கத்தி படத்தில் ஒரு காட்சியில் விஜய்யுடன் நடித்திருந்தார் முருகதாஸ் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

 

Leave a Reply

Your email address will not be published.

one + nineteen =