உஷாரய்யா உஷாரு.; சர்கார் டீம் உஷாரு.. முருகதாஸ் எச்சரிக்கை.!
ஏஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் சர்கார்.
தீபாவளிக்கு இப்படத்தை வெளியிட உள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.
எனவே படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படம் குறித்து இந்த படத்தில் பணியாற்றிய ஜுனியர் ஆர்டிஸ்டுகள் சிலர் சில தகவல்களை வெளியில் பரிமாறி வருகின்றனர்.
எனவே இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் முக்கியமான ஒரு அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கம் மூலம் வெளியிட்டுள்ளார்.
அதில், ‘‘ஏராளமானவர்களின் கடும் உழைப்பில் ‘சர்கார்’ படம் உருவாகியுள்ளது.
ஆனால் சிறிதும் யோசிக்காமலும், நேர்மையின்றியும் சில ஜூனியர் ஆர்டிஸ்டுகள் ஏராளமான நேர்காணல்களை அளித்திருக்கிறீர்கள்.
இது போன்ற நேர்காணல்களை அளித்தால் சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டியதாக இருக்கும்‘’ என கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.