சர்கார் கதை திருட்டு வழக்கு தடையும் தீபாவளி ரிலீஸ் தேதியும்…
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்துள்ள சர்கார் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார்.
படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில் இப்படத்தின் கதை என்னுடையது என வருண் என்கிற ராஜேந்திரன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
அவருடைய மனுவில்…
நான் எழுதிய செங்கோல் படக்கதையை தென்னிந்திய எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்து வைத்துள்ளேன்.
அந்தக்கதையை திருடி தான் முருகதாஸ் சர்கார் படத்தை இயக்கி உள்ளார். இதுதொடர்பாக எழுத்தாளர்கள் சங்கத்தில் புகார் செய்துள்ளேன். அவர்களும் இது என்னுடைய கதை தான் என உறுதி செய்திருக்கிறார்கள்.
ஆகவே எனக்கு இழப்பீடாக ரூ.30 லட்சம் வழங்க வேண்டும். படத்தின் தலைப்பில் என்னுடைய கதை என இடம் பெற செய்ய வேண்டும், அதுவரை படத்தை திரையிட கூடாது, இதை அவசர வழக்காக எடுத்து கொள்ள வேண்டும் என தெரிவித்து இருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, இயக்குநர் முருகதாஸ், படத்தை தயாரிக்கும் சன்பிக்சர்ஸ் நிறுவனம் மற்றும் எழுத்தாளர்கள் சங்கம் ஆகியோர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பி, வழக்கை அக்., 30-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
அதுவரை சர்கார் படத்திற்கு தடை விதிக்க முடியாது எனவும் கூறினர்.
இதனிடையே சன் பிக்சர்ஸ் ட்விட்டரில் பக்கத்தில் இரண்டு போஸ்டர்களை வெளியிட்டுள்னளர்.
அதில் சர்கார் படத்திற்கு சென்சாரில் யு/ஏ சான்று கிடைத்துள்ளதாகவும் மற்றொரு போஸ்டரில் நவ. 6-ம் தேதி, தீபாவளி தினத்தில் படத்தை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.