அதிர வைக்கும் “சர்கார்” டீசர்; கார்ப்பரேட் கிரிமினலாக மிரட்டும் விஜய்

கத்தி, துப்பாக்கி படங்களை தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் 3வது முறையாக நடித்துள்ள படம் சர்கார்.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க, ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

இதில் விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள சர்கார் பட டீசர் அக்டோபர் 19ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியானது.

இந்த டீசர் வெளியான 6 மணி நேரத்திற்குள் 1 கோடி பார்வையாளர்களை பெற்றுள்ளதாம்.

மேலும் இது பல சாதனைகளை படைக்கும் என எதிர்பார்க்கலாம்.

இதில் அமெரிக்காவில் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தில் சிஈஓ. ஆக வேலை பார்க்கிறார். அவரது பெயர் சுந்தர்.

தமிழகத்தில் குடியுரிமை உள்ள அவர் தேர்தலில் ஓட்டுப்போட இந்தியா வருகிறார்.

ஆனால் அவரது ஓட்டை யாரோ கள்ளத்தனமாக போட்டுவிட அவர் கோபம் அடைகிறார். அதன் பின்னர் அவர் எடிக்கும் முடிவு என்ன என்பதை தான் டீசரில் லீடாக காட்டியுள்ளனர்.

இதில் சர்காரை மிரட்டும் விதமாக ஐ யம் எ கார்ப்பரேட் கிரிமினல் என பன்ச் டயலாக் பேசியுள்ளார் விஜய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *