சத்யம் தியேட்டரை தங்கள் கன்ட்ரோலில் கொண்டு வரும் 2.0 டீம்
ஷங்கர் இயக்கத்தில் ரூ. 540 கோடியில் லைகா நிறுவனம் தயாரித்துள்ள படம் 2.0.
ஏஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தில் ரஜினிகாந்த், அக்சய்குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
நாளை நவம்பர் 3ஆம் தேதி இந்த 2.0 பட டிரைலர் வெளியீட்டு விழா சென்னை சத்யம் தியேட்டரில் நடைபெறவுள்ளது.
இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை ஜீடிவி வாங்கியுள்ள நிலையில் நாளை காலை 10 மணிக்கு நேரடியாக ஒளிப்பரப்பு செய்கின்றனர்.
பாதுகாப்பு காரணங்களுக்காக சத்யம் தியேட்டரில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாம்.
மேலும் அங்குள்ள தியேட்டர்களில் காலை காட்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
இவ்விழாவில் ரஜினிகாந்த், அக்சய்குமார், எமி ஜாக்சன், ஏ.ஆர்.ரஹ்மான், ஷங்கர், லைகா சுபாஷ்கரன் உள்ளிட்டோருடன்பல்வேறு மாநில திரைப்பிரபலங்களும் பங்கேற்கிறார்களாம்.
அப்போது ரஜினி மற்றும் அக்சய் ஆகியோரை அந்த பிரபலங்கள் கேள்வி கேட்பார்களாம்.
இந்த விழாவுக்கு எவரும் என்ட்ரி பாஸ் இல்லாமல் உள்ளே செல்ல முடியாது என பிஆர்ஓ.க்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.