பேயே இல்லாத ஹாரர் படத்தை உருவாகியுள்ள- VZ துரை

ஸ்க்ரீன் சீன் மீடியா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் சுந்தர் C நடிப்பில் VZ துரை இயக்கத்தில் உருவாகியுள்ள ஹாரர் திரைப்படம் “ இருட்டு “. இப்படம் இதுவரை நாம் யாரும் கண்டிடாத புது வகை ஹாரர் திரைப்படமாக இருக்கும். 
சுந்தர் C இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார். ஹாரர் காமெடி படமான  “ அரண்மனையின் ” இரண்டு பாகங்களையும் சுந்தர் C இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இப்படம் புதுமையான டார்க் ஹாரர் படமாக இருக்கும். முகவரி , நேபாளி , தொட்டி ஜெயா , 6 மெழுகுவர்த்திகள் போன்ற கல்ட் படங்களை இயக்கிய VZ துரை இப்படத்தை இயக்கியுள்ளார். 
 
படத்தை பற்றி இயக்குனர் கூறியது , ஆம் , இது புதுமையான ஹாரர் படம் தான். பேயே இல்லாத ஹாரர் படம் இது. எனக்கு பேயே இல்லாத ஹாரர் படம் ஒன்றை இயக்க வேண்டும் என்று ஆசை. அதை நான் இப்படத்தில் சரியாக செய்துள்ளேன் என்று நினைக்கிறேன் என்றார். 
 
படத்தின் 85 % படப்பிடிப்பு ஒரே ஷெட்யூலில்  ஊட்டியில் வைத்து நடைபெற்றது. இன்னும் படத்தின் சில காட்சிகள் ஹைராபாத் மற்றும் சூரத்தில் நடைபெறவுள்ளது.
 
படத்தில் சுந்தர் C உடன்  தன்ஷிகா , சாக்சி பர்வீந்தர் , VTV கணேஷ் , யோகிபாபு ஆகியோர் நடிக்கிறார்கள். கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.கேமரா  E. கிருஷ்ணசாமி , எடிட்டிங் R. சுதர்ஷன் , கலை AK முத்து , ஸ்டில்ஸ் சாரதி , டிசைன்ஸ் விருமாண்டி , நிர்வாக தயாரிப்பு APV மாறன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *