அகத்திக் கீரையின் மருத்துவ குணங்கள்

அகத்திக் கீரையை யாரும் எளிதில் உண்பதில்லை. ஏனென்றால் அதில் கசப்புத் தன்மை கொஞ்சம் இருப்பதனால் உணவில் சேர்த்துக்கொள்ளப் பயப்படுகின்றார்கள்.

ஆனால் இந்த அகத்திக் கீரையை உண்பவருக்கு பித்த சம்பந்தமான நோய்கள் நீங்குவதுடன் உணவு எளிதில் ஜீரணமாகும்.

வாரத்துக்கு ஒருமுறையேனும் தவறாமல் அகத்திக் கீரையை சமைத்து சாப்பிட வேண்டும். இதனால் தேகத்தில் உஷ்ணம் தணிந்து கண்கள் குளிர்ச்சி பெறும்.

மலம், சிறுநீர் தாரளமாக கழியும். குடல் புண் ஆற்றும்.

அகத்திக்கீரையை சாம்பாரில் இட்டும், துவட்டல் கறியாக சமைத்தும் சாப்பிட நோய்கள் அகலும்.

இனி ஒவ்வொரு கிழமையும் அகத்திக் கீரை உண்டு வாருங்கள் எளிதில் உங்கள் வருத்தங்கள் குணமடையும்.

ஆரோக்கியமாக வாழ்வதற்கு….

தூங்கப் போவதற்கு முன், தினமும் கை, கால்கள், முகத்தை கழுவுங்கள், பற்களையும் சுத்தம் செய்யுங்கள்.

சிறிது நேரம் வாய்க்குள் தண்ணீரை வைத்து, நன்றாக வாயை கொப்பளியுங்கள்.

தினமும் நன்றாக தூங்குங்கள். மாதத்தில் ஒரு முறையாவது கண்ணாடி முன் நின்று, உங்கள் உடலை பாருங்கள். அப்படி பார்த்தால் உடலில் ஏற்படும் சுருக்கங்களை கண்டறியலாம்.

உணவில் பச்சை காய்கறிகளையும், பழ வகைகளையும் தேவையான அளவு சேருங்கள்.

முடிந்த அளவு வாகன பயணங்களை மேற்கொள்ளாதீர்கள், அதிகமான தூரம் நடந்து செல்ல முயற்சி செய்யுங்கள்.

தினமும் குறைந்தது 50 முறை உட்கார்ந்து எழுவது நல்லது. அப்படி செய்தால் இடுப்பு அழகுப்படும், தொந்தியும், வயிறும் குறையும்.

குளிக்கும் போது எப்போதும் குதிகாலையும், கால் விரல்களையும் தேய்த்து கழுவுங்கள்.

படுக்கைக்கு அருகிலும், வேலை பார்க்கும் இடத்துக்கு அருகிலும், ஒரு பாட்டில் தண்ணீர் எடுத்து வைத்து கொள்ளுங்கள். தேவைப்படும் போதெல்லாம் தண்ணீர் குடியுங்கள்.

முளைவிட்ட கடலை, சிறுபயறு போன்றவைகளை காலை உணவில் சேர்க்க வேண்டும்.

கை நகங்களை வெட்டி சுத்தம் செய்வதை, கடமையாக கொள்ளவும்.

உறங்கும் போது காட்டன் துணிகளை அணியுங்கள்.

அதிக சூடு, அதிக குளிர் உணவுகள் பற்களுக்கு கேடு பயக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

இரவு இனிப்பு பலகாரங்கள் சாப்பிட்டால் மறக்காமல் பற்களை சுத்தப்படுத்தி விடுங்கள்.

இரவில் அதிக நேரம் விழித்திருப்பதும், பகலில் தூக்கம் போடுவதும் ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல.

கொழுப்பு நிறைந்த எண்ணெயை உணவில் சேர்க்காதீர்கள், அது உடல் அழகுக்கும், ஆரோக்கியத்திற்கும் கேடு பயக்கும்.

தினமும் காலையில் டீயோ, காபியோ குடிப்பதற்கு முன், ஒரு பழம் சாப்பிடுவது நல்லது.

தினமும் காலையில் 10 நிமிடமாவது உடற்பயிற்சி செய்யுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *