வளமான தாம்பத்திய நல்லுறவு – கருத்தரங்கம்

வளமான தாம்பத்திய நல்லுறவு-கருத்தரங்கம்

மேற்குறிப்பிட்டுள்ள தலைப்பில், ஆகஸ்ட் 17, 18, 19 தேதிகளில் சென்னை ஹையட் ரேஜன்ஸி Hotel-லில் மேற்குறிப்பிட்டுள்ள தலைப்பில் 3- நாள் கருத்தரங்கம் நடக்க உள்ளது.

இல்லற சுகம் வழங்க விழையும் தாம்பாத்திய உறவு, மனித குலத்தின் அடிப்படை உரிமை. இக்கருத்தை WHO நிறுவனம் 2002-ஆம் ஆண்டிலேயே அங்கீகரித்தது! இது ஒரு குறைபாடோ உடல் உபாதையோ அல்ல! அரசாங்க ரீதியாகவும் பொதுநல உடல் பேணுதல் பற்றிய ஒரு விஷயமாக இதை கருத வேண்டும்!

தாம்பத்திய உறவு மற்றும் அது தொடர்பான மருந்துகள் ஆகியவற்றின் தற்கால வளர்ச்சி பரிமாணங்களை இந்த கருத்தரங்கம் அலசி ஆராயும்! இந்த துறையில் தேர்ச்சி பெற்ற வல்லுநர்கள் மற்றும் விற்பன்னார்கள் பலரும் இதில் கலந்து கொண்டு கருத்து பரிமாற்றங்களில் ஈடுபடுவார்கள்!

இதர தலைப்புகளிலும் விவாதங்கள் நடைபெறும். கலை ரீதியாக இந்த விஷயங்களை அலசி ஆராயும் நிகழ்வுகளும் உண்டு! 11 நாடுகளில் இருந்து 250 பிரதிநிதிகள் பங்குப்பெறுகிறார்கள். இந்த கருத்தரங்கத்தின் மூலமாக இந்த துறையின் நிகழ்வுகள் பற்றியும் பரஸ்பரம் கருத்து பரிமாற்றங்கள் நடைபெறும்! என்கிறார், Dr. நாராயண ரெட்டி, இந்த நிகழ்வின் தலைவர். பல்வேறு தலைப்புகளிலும் பல கோணங்களிலும் கருத்தரங்கில் விவாதங்கள் நடைபெறும்.

பலரும் பயன் பெற வழி வகுக்கும் விதத்தில் இந்த கருத்தரங்கம் நடைபெற உள்ளது!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *