சமூகக்கருத்து கூறிய குறும்பட இயக்குனர்களுக்கு கிடைத்த பரிசும்… வாய்ப்பும்….

மூவிபப் பர்ஸ்டகிளாப் சீசன்-2 வெற்றியாளர்களை அறிவித்தது க்யூப் சினிமா… முதல் பரிசு ரூ 3 லட்சம்!!

(குறும்பட வடிவில். சமூகத்திற்கான செய்திகளை வழங்கியுள்ள ஆர்வம் மிக்க இயக்குனர்கள்)

க்யூப் சினிமா (பி) லிட் நிறுவனம் மூவிபப் பர்ஸ்டகிளாப் சீசன்-2 வெற்றியாளர்களை இன்று அறிவித்துள்ளது. ‘கல்கி’ என்கிற குறும்படத்தை இயக்கிய விஷ்ணு இடவன் முதல் பரிசான ரூ.3 லட்சத்தை பெறுவதுடன் சூர்யாவின் 2D நிறுவனத்தில் ஸ்கிரிப்ட் சொல்வதற்கான பொன்னான வாய்ப்பையும் பெற்றுள்ளார்..

இவருக்கு அடுத்ததாக ‘கம்பளிப்பூச்சி’ குறும்படத்தை இயக்கிய வி.ஜி.பாலசுப்ரமணியன் 2 லட்சம் பரிசுத்தொகையும், ‘பேரார்வம்’ குறும்படத்திற்காக சாரங் தியாகு ரூ.1 லட்சம், ‘குக்கருக்கு விசில் போடு’ குறும்படத்தை இயக்கிய ஷ்யாம் சுந்தர் மற்றும் ‘மயிர்’ குறும்படத்தை இயக்கிய யோகி ஆகியோர் தலா ரூ.25 ஆயிரம் பரிசுத்தொகையும் பெறுகிறார்கள்.

இதில் கவனிக்கத்தக்க அம்சம் என்னவென்றால் இந்த வருடம் குறும்படங்கள் மூலமாக மிகவும் வலிமையான சமூக கருத்துக்கள் சொல்லப்பட்டுள்ளதுதான். வாழ்க்கைக்கும் நேரத்திற்கும் இடையேயான ஓட்டத்தை, 3 மணி நேர படமாக எடுத்தால் என்ன தாக்கத்தை ஏற்படுத்துமோ, அதே த்ரில்லை 3 நிமிடமே ஓடக்கூடிய ‘கல்கி’ குறும்படம் வழங்கியுள்ளது. ‘மயிர்’ குறும்படம் விவசாயிகளின் நிலையை டார்க் காமெடியில் கூறியுள்ளது. அரசியல் நையாண்டி கலந்து உருவாக்கப்பட்ட ‘குக்கருக்கு விசில் போடு’ அதன் தைரியயத்திற்காக பாராட்டுக்களை பெற்றுள்ளது. குழந்தைகள் பாலியல் வன்கொடுமை எனும் வலிமையான ஒரு மெசேஜுடன் உருவான கம்பளிப்பூச்சி’ குறும்படமும் பேரார்வம் குறும்படமும் பார்வையாளர்களிடம் நேர்மறையான விமர்சனங்களையும் பாராட்டுக்களையும் பெற்றுள்ளன.

“இந்த சீசன் எங்களுக்கு நிறைய புதிய திறமையாளர்களை அடையாளம் காட்டியுள்ளதுடன் பலதரப்பட்ட புதுமையான கதைகளையும் எங்கள் முன் வெளிக்கொண்டு வந்துள்ளது. அவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்களை சொல்வதுடன் இந்த புதிய படைப்பாளிகளுடன் இணைந்து பணியாற்றவும் ஆர்வமாக உள்ளோம்.. நாங்கள் ஆதரிக்க விரும்பும் படைப்புகள் குறித்த நிறைய பாதைகளை இந்த தளம் எங்களுக்கு வழங்கியுள்ளது” என்கிறார் நடிகர் சூர்யா. இவரது 2D நிறுவனம் புதுமையான திறமையாளர்களை வளர்த்தெடுப்பதன் மூலமாக, சற்றே வித்தியாசமாக, சிறந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, தரமான, அதேசமயம் பொழுபோக்குக்கு உத்தரவாதம் தரக்கூடிய கதைகளை தருவதில் கவனம் செலுத்தி வருகிறது.

மூவிபப் பர்ஸ்ட் கிளாப் தளத்தின் சார்பில் வெளியான 5 படங்களை சுமார் 5 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் வெறும் ஐந்து வாரங்களுக்குள் தமிழ்நாடு முழுதும் சுமார் 200 முதன்மையான திரையரங்குகளில் பார்த்து ரசித்துள்ளனர். வாழ்நாளில் ஒருமுறை கிடைக்கும் அனுபவமாக ஐந்து இயக்குனர்கள் ,மாநிலம் முழுவதும் அவர்களது படங்கள் திரையிடப்பட்டபோது, அவர்களுடைய உழைப்புக்கு பெரிய அளவில் வரவேற்பையும் ரசிகர்களின் நேரடியான கருத்துக்களையும் பெற்று பயனடைந்துள்ளனர். இந்த திரையிடலின்போது பொதுவான பார்வையாளர்களும் அவர்களுக்கு பிடித்த படத்தை SMS ஒட்டு மற்றும் APP ஓட்டு மூலமாகவும் வாக்களிக்குமாறு அழைக்கப்பட்டனர்.

பிரபல இயக்குனர்கள் ராம், விக்னேஷ் சிவன், கார்த்திக் நரேன், அருண்பிரபு, நித்திலன், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சர், எடிட்ட்டார் ரூபன், சவுண்ட் இன்ஜினியர் உதய், விமர்சகர் சதிஷ் மற்றும் இவர்களுடன் 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் CEO ராஜசேகரபாண்டியன் உள்ளிட்ட ஜூரி உறுப்பினர்களின் அறிவார்ந்த முடிவுகள் மற்றும் பார்வையாளர்கள் வாக்குகள் ஆகியவற்றின் அடிப்படையில் தான் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

“மூவிபப் பர்ஸ்டகிளாப் சீசன்-2வுக்கு கிடைத்த வரவேற்பை கண்டு நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். மேலும் பட்டியல் இறுதி செய்யப்பட படங்களின் போஸ்ட் புரொடக்சன் பணிகளை மேற்கொண்ட Knack Studios மற்றும் இந்த பணிகளை திறமையாக கையாண்ட Little Shows குழுவுக்கும் எங்களது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். புதியவர்களின் திறமையை வெளிச்சம் போட்டு காட்ட ஒரு நேர்மையான சிறந்த தளம் தேவைப்படுகிறது என்கிற, இப்படி ஒரு பொருத்தமான வாய்ப்பு கிடைக்காவிட்டால் அவர்களது வாய்ப்பு கூட்டத்தில் காணாமல் போய்விடும் என்கிற எங்கள் நம்பிக்கையை இந்த வரவேற்பு துல்லியமாக நியாயப்படுத்தியுள்ளது. தங்களது படைப்புகளை பல்வேறு நகரங்களில் உள்ள ரசிகர்களுடன் இணைந்து வெள்ளித்திரையில் காண விரும்பிய, அந்த அனுபவத்திற்காகவே வாழும் ஆர்வமுள்ள படைப்பாளிகளுக்காக இந்த புதிய முயற்சியில் எங்களுக்கு துணை நின்ற அனைத்து க்யூப் நெட்வொர்க் திரையரங்குகளுக்கும் நாங்கள் நன்றி சொல்கிறோம்” என்கிறார் க்யூப் சினிமா டெக்னாலஜி நிறுவனத்தின் CEO அரவிந்த் ரங்கநாதன்

மூவி பப்.நிறுவனம் குறித்து

இந்திய படங்களை பார்க்கும் ரசிகர்களுக்கு சினிமா தொடர்பான செய்திகளை முழுமையான தகவல்களுடன் வழங்குகிறது மூவி பப். பல்வேறுவகையான பயனாளிகளுக்கு எல்லாவிதமான தகவல்களும் கிடைக்கும் வேண்டும் என்பதுதான் இதன் நோக்கம். வாடிக்கையாளர்கள் மட்டுமல்லாமல் , படைப்பாளிகள், திரையரங்குகள் என அனைவருக்கும் துணைநிற்கும் விதமாக நுகர்வு, காட்சிப்படுத்தல் மற்றும் உள்ளடக்க உருவாக்கம் போன்ற சினிமா வியாபாரம் குறித்த தகவல்களையும் தீர்வுகளையும் வழங்குவதன் மூலமாக பயனாளிகளின் தேவைகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளது ..

வாடிக்கையாளர்களுக்கு அதாவது ரசிகர்களுக்கு சினிமா சம்பந்தமான முழுமையான தகவல்களை வழங்குகிறது. படைப்பாளிகளுக்கு அவர்களது படைப்புகளை விளம்பரப்படுத்தவும், இசை மற்றும் அது தொடர்பானவற்றை விற்பனை செய்வதற்கும், பார்வையாளர்களுக்கு தாங்கள் விரும்பியதை தேர்வுசெய்ய, விளம்பரப்படுத்த மற்றும் மற்றும் பயனாளிகளின் மதிப்பீட்டு கருத்துக்களை அறிந்துகொள்ளும் தளமாக இது விளங்குகிறது. மூவி பப்.காமில் உள்ள அனைத்து தகவல்களும், உடனுக்குடனான அப்போதைய தேதி வரையிலான செய்திகள் தேவைப்படுகின்ற எந்த வெப்சைட்டுகளிலும் API என்கிற வடிவத்தில் கிடைக்கிறது.

எப்போதுமே சினிமா சார்ந்த மற்ற விஷயங்களில் நினைப்பும் நாட்டமும் உள்ளவரான சூர்யா, 2D நிறுவனத்தின் மூலம் பொழுதுபோக்கு தொழிலதிபராகவும் மாறியவர். இந்நிறுவனத்தின் CEO ராஜசேகர கற்பூரசுந்தரபாண்டியன் தரமான, வித்தியாசமான, பொழுதுபோக்கான படைப்புகளை வழங்குவதை உறுதி செய்திருக்கிறார். 2014ல் துவங்கப்பட்ட இந்த நிறுவனம் தொழில்நுட்பத்தில் சிறந்தவற்றை உருவாக்கும் விதமாக புதுமையான திறமையாளர்களை வளர்த்துவிட்டுள்ளது. நல்ல பொழுதுபோக்கு படைப்புகளை எல்லா தரப்பு மக்களுக்கும் தரவேண்டும் என்கிற அர்ப்பணிப்பு காரணமாக படத்தயாரிப்பு மற்றும் சந்தைப்படுத்தும் உத்திகள் சர்வேதச தரத்தில் இங்கே உருவாக்கப்பட்டுள்ளன. தென்னிந்திய சினிமாவின் சகோதரத்துவத்தை பறைசாற்றும் ஒரு பெயர் தான் 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனம்.

கல்கி

ஓர் இஸ்லாமிய பெண் அன்பு என்பது மதம் சார்பற்றது என்பதை கோவிலுக்குள்ளே இருக்கும் கிறிஸ்துவர் மூலமாக உணர்கிறாள்.

நடிகர்கள் ; அருண் அலெக்ஸ்சாண்டர், மது வந்திதா

தொழில்நுட்ப கலைஞர்கள் ;

இயக்குனர் ; விஷ்ணு இடவன்
ஒளிப்பதிவாளர் ; லியோ பிரிட்டோ
இசை ; ஜென் – சத்யா
பிரிவு ; ட்ராமா

கம்பளிப்பூச்சி

திருமணத்திற்கு தயாராக இருக்கும் ஒரு பெண்.. தன்னை பெண் பார்க்க வந்த மாப்பிள்ளையின் தந்தை தனது பள்ளி ஆசிரியர் என்பதை அறிகிறாள். பள்ளிநாட்களில் அவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான அவள் அந்த வலியிலிருந்து பல போராட்டங்களுக்கு பிறகே மீளமுடிந்தது. அதை தொடர்ந்து அந்த பெண் என்ன முடிவு எடுக்கிறாள்

தொழில்நுட்ப கலைஞர்கள் ;

இயக்குனர் ; V.G பாலசுப்ரமணியன்
ஒளிப்பதிவாளர் ; ஜென்சன் சிங்கராஜா
இசை ; சுந்தரமூர்த்தி K.S
பிரிவு ; ட்ராமா

குக்கருக்கு விசில் போடு

20 ரூபாய் நோட்டும் அதன் சக்தியை காட்டும் பரபரப்பான விஷயங்களும்

நடிகர்கள் ; ஐஸ்வர்யா, ஜீவா, பினு,பிரபு, பிரவீன் மற்றும் சரவணன்

தொழில்நுட்ப கலைஞர்கள் ;

இயக்குனர் ; ஷியாம் சுந்தர்
ஒளிப்பதிவாளர் ; அமீன்
இசை ; V.கோகுலகிருஷ்ணா
பிரிவு ; ட்ராமா

மயிர்

அங்கே இருப்பது இருட்டல்ல.. அறியாமை மட்டும் தான்..

நடிகர்கள் ; அருண் அலெக்சாண்டர், அரவிந்த் ஜானகிராமன், காத்துராஜா மற்றும் சாந்தி

தொழில்நுட்ப கலைஞர்கள் ;

இயக்குனர் ; லோகி
ஒளிப்பதிவாளர் ; ரூபன் கிஷோர்,
இசை ; சாந்து ஓம்கார்
படத்தொகுப்பு ; ஆகாஷ் தாமஸ்
கலரிஸ்ட் ; ஆகாஷ் தாமஸ்
பிரிவு ; ட்ராமா

பேரார்வம்

50 வயதான அதேசமயம் ஆர்வமும் துடிப்புமிக்க படைப்பாளி ஒருவர் ஒரு தயாரிப்பாளாரிடம் கதை சொல்வது

நடிகர்கள் ; பவல் குமார்,ஹரிஷ் தேவ்,ஜெயக்குமார் ஜானகிராமன், ராஜஸ்ரீ தாஸ்

தொழில்நுட்ப கலைஞர்கள் ;

இயக்குனர் ; சாரங் தியாகு
ஒளிப்பதிவாளர் ; தனுஷ் பாஸ்கர்
இசை ; பிரணவ் ராஜ்குமார்
பிரிவு ; ட்ராமா

Moviebuff FirstClap Season 2 Awards -Final Press release-01-Sep-2018

Synopsis

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *