ரஜினிக்கு எதிராக இன்று மீண்டும் ஓசூரை சேர்ந்த சிலம்பரசன் மனு தாக்கல்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராடியபோது நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்மந்தமாக கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த் எதற்கெடுத்தாலும் போராட்டம், போராட்டம் என்றால் தமிழ்நாடே சுடுகாடு ஆகிவிடும் என தமிழக மக்கள் அனைவரையும் மிரட்டினார், மிரட்டல் விடுத்தார் என கூறி நடிகர் ரஜினிகாந்த் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி கடந்த மே மாதம் ஓசூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் எந்த நடவடிக்கையும் போலீஸ் எடுக்கவில்லை என கூறி நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்கு பதிவு செய்ய போலிசுக்கு உத்திரவிடக்கோரி மனு தாக்கல் செய்தார்
மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் கீழமை நீதிமன்றத்தை அணுகி பரிகாரம் தேடி கொள்ள மனுதாரருக்கு உத்திரவிட்டிருந்த நிலையில் மனுதாரர் ஓசூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம்-2ல் 3 முறை மனு தாக்கல் செய்தும் உரிய காரணங்கல் இன்றி மனுவை திருப்பட்டதாகவும், அலைகழிப்பாதாகவும் கூறி மனுதாரர் இன்று மீண்டும் தலைமை நீதிதுறை நடுவர் கிருஷ்ணகிரி முன் மனு தாக்கல் செய்தார்
மனுவை விசாரிக்காமலேயே நீதிபதி அதிரடியாக மனுவை ஏற்க்க முடியாது என மனு திருப்பபடுகிறது என அறிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published.

four × 2 =