சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை படத்தை தயாரிக்கும் காலா டைரக்டர்

சினிமா மற்றும் சீரியல் என இரண்டு வேறு வேறு பாதைகளில் பயணித்தாலும் தற்போது அறிமுகமாகியுள்ள வெப் சீரிஸ் இரண்டையும் ஒன்றாக இணைத்து பயணிக்கிறது.

சினிமா பிரபலங்களும் வெப் சீரியஸைகளை இயக்க, தயாரிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன், மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறை, பாலிவுட்டில் தி டர்ட்டி பிக்சர்ஸ் என்ற பெயரில் படமாக வெளியானது.

இதில் சில்க்ஸ்மிதாவாக நடித்த வித்யாபாலன், தேசிய விருது பெற்றார்.

தற்போது தனது நீலம் புரொடக்சன்ஸ் சார்பில், சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை வெப்சீரிஸாக தயாரிக்க உள்ளாராம் காலா டைரக்டர் ரஞ்சித்.

இதற்கான முதற்கட்ட வேலைகளை அவர் தொடங்கிவிட்டாராம்.

விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published.

three × 3 =