சிலுக்குவார்பட்டி சிங்கம் விமர்சனம்

நடிகர்கள்: விஷ்ணு விஷால்ரெஜினாகருணாகரன்யோகி பாபுஆனந்த ராஜ்மன்சூர் அலிகான், ஓவியா, சிங்கமுத்து, மற்றும் பலர்
இயக்கம் – செல்ல அய்யாவு
ஒளிப்பதிவு – ஜே. லட்சுமண்
இசை – லியோன் ஜேம்ஸ்
எடிட்டர் – ரூபன்
தயாரிப்பு – விஷ்ணு விஷால்

கதை என்ன..?

விஷ்ணு விஷால் மற்றும் கருணாகரன் இருவரும் போலீஸ். இதில் விஷ்ணு ரவுடிகள் என்றாலே மிகவும் பயப்படும் குணம் கொண்டவர்.

ஆனால் இவரது உயர் அதிகாரி லிவிஸ்டனுக்கு தெரியாது.

எனவே எந்த ரிஸ்க்குனும் எடுக்காமல் உயர் அதிகாரிகளுக்கு டீ, டீபன் வாங்கி கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.

ஆனால் ஓசியில் ஆபாயில் கிடைத்தால் விடவே மாட்டார்.

ஒரு முறை பாரில் ஒரு பிரச்சினை என போலீஸ் இவரை அழைத்துச் செல்கிறது.

அப்போது ஒரு ரவுடியை ஆபாயில் தட்டி விட்டதற்காக அவரை அடித்து துவைத்து விடுகிறார்.

மேலும் அவரை சிறையிலும் அடைத்து விடுகிறார்.

அதன் பின்னர்தான் அவர் மிகப்பெரிய ரவுடி என்ற விவரம் இவருக்கு தெரிய வருகிறது.

இதனால் உயிருக்கு பயந்து ஓடி ஒளிகிறார்.

அதன் பின்னர் என்ன எல்லாம் நடந்தது? என்பதை நமக்கு நகைச்சுவை விருந்தாக தந்திருக்கிறார் டைரக்டர் செல்லா அய்யாவு.

கேரக்டர்கள்…

முண்டாசுப்பட்டி முதல் காமெடி படங்கள் பெரும்பாலும் விஷ்ணு விஷாலுக்கு நன்றாகவே கை கொடுக்கிறது.

ரெஜினாவுடன் டூயட், ஓவியாவுடன் குத்தாட்டம், ரவுடிக்கு பயந்து மாறு வேடம் என கலக்கியிருக்கிறார் இந்த சிலுக்குவார்பட்டி சிங்கம்.

இவருடன் ஒரு பெரிய காமெடி நட்சத்திர பட்டாளமே இணைந்துள்ளது- எனவே படம் முழுக்க காமெடி பட்டாசு தான்.

கருணாகரன், யோகிபாபு, ஆனந்த் ராஜ், மன்சூர் அலிகான், சிங்கமுத்து, சௌந்தர் ராஜா என அனைவரும் சிரிப்பு மழையில் நம்மை நனைக்கிறார்கள்.

கடைசி காட்சியில் ஆனந்த் ராஜ் மற்றும் பாட்ஷா ரஜினி சீன்கள் சிறப்பு.

அழகான டீச்சர், கலர் புல் ஆடைகள் என ரெஜினா இளைஞர்களை கவருகிறார்.

பிக்பாஸ் புகழ் ஓவியா சில காட்சிகளிலேயே வந்தாலும் அழகான ஆட்டத்திலும் நடிப்பிலும் ஈர்க்கிறார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்..

ஒளிப்பதிவில் எந்த குறையுமில்லை. ஜே. லட்சுமண் பணி கச்சிதம்.

லியோன் ஜேம்ஸ் இசையில் பாடல்களும் பின்னணை இசையும் ரசிக்க வைக்கிறது.

ராட்சசன் பட போலீஸ் கேரக்டருக்கும் இந்த சிலுக்குவார்பட்டி சிங்கம் போலீஸ் கேரக்டருக்கும் நிறைய வித்தியாசம் காட்டி ரசிக்க வைத்த விஷ்னுவை நன்றாகவே பாராட்டலாம்.

டைரக்டர் செல்ல அய்யாவுக்கு இனி நல்ல வாய்ப்புகள் வரும்.

லாஜிக் தேவையில்லை. இந்த கிறிஸ்துமஸ் வாரம் ஜாலியாக இருக்கனும் என்றால் இந்த காமெடி படத்தை நிச்சயம் ரசிக்கலாம்.

சிலுக்குவார்பட்டி சிங்கம் … சிரிப்பு மழை சிங்கம்

 

 

Leave a Reply

Your email address will not be published.

two × 3 =