ப்ளாக்ல டிக்கெட் வாங்காம பெற்றோருக்கு டிரெஸ் எடுத்து கொடுங்க – ரசிகர்களுக்கு சிம்பு அறிவுரை

ப்ளாக்ல டிக்கெட் வாங்காம பெற்றோருக்கு டிரெஸ் எடுத்து கொடுங்க. : சிம்பு

லைகா தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’.

இதில் மேகா ஆகாஷ், கேத்ரீன் தெரசா, மஹத், ரோபோ சங்கர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ள இப்படத்தை வருகிற பிப்ரவரி 1-ந்தேதி ரிலீஸ் செய்யவுள்ளனர்.

இந்நிலையில் தன் ரசிகர்களுக்கு இப்படம் தொடர்பாக ஒரு கோரிக்கை வைத்துள்ளார் நடிகர் சிம்பு.

அதில், “வந்தா ராஜாவா தான் வருவேன் என்ற என் படத்திற்கு பிளாக்கில் டிக்கெட் வாங்கி படம் பார்க்காதீர்கள்.

தியேட்டரில் என்ன கட்டணம் வசூலிக்கிறார்களோ? அதை கட்டணம் செலுத்தி டிக்கெட் வாங்கி படம் பாருங்கள்.

அதுபோல் கட்-அவுட் வைத்து அதற்கு பால் அபிஷேகம் செய்ய வேண்டாம்.

அதற்குப் பதிலாக உங்கள் பெற்றோருக்கு டிரெஸ் எடுத்து கொடுங்க. உங்க தம்பி தங்கச்சிக்கு சாக்லெட் வாங்கி கொடுங்க.

அதை போட்டோ எடுத்து இணையத்தில் பகிருங்கள். எனக்கு அது போதும்..” என ரசிகர்களுக்கு அன்பு கட்டளையிட்டுள்ளார் சிம்பு.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *