‘மெகா ஸ்டார்’ மம்மூட்டியுடன் மோதும் சிம்பு & ஜிவி பிரகாஷ்

மெகா ஸ்டார் மம்மூட்டியுடன் மோதும் சிம்பு & ஜிவி பிரகாஷ்

மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட பேட்ட மற்றும் விஸ்வாசம் ஆகிய பொங்கல் திரைப்படங்கள் ஒரு வழியாக ரிலீஸாகி அதே பரபரப்பு வசூலுடன் ஓடிக் கொண்டிருக்கிறது.

இதனையடுத்து வருகிற ஜனவரி 25ஆம் தேதி சார்லி சாப்ளின் 2 உள்ளிட்ட ஒரு சில படங்கள் வெளியாகவுள்ளது.

இந்த படங்களை தொடர்ந்து வருகிற மாதம் பிப்ரவரி 1ஆம் தேதியன்று 3 முக்கிய நடிகர்களின் படங்கள் மோத உள்ளன. அதன் விவரம் வருமாறு…

சுந்தர்.சி. இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படம் வெளியாகவுள்ளது.

இதே நாளில் ராஜிவ் மேனன் இயக்கியுள்ள ஜி.வி.பிரகாஷ் குமாரின் ‘சர்வம் தாளமயம்’ படமும் வெளியாகிறது.

இவையில்லாமல் பல விருதுகளை குவித்துள்ள மம்முட்டியின் ‘பேரன்பு’ என்ற படமும் வெளியாகின்றது. ராம் இப்படத்தை இயக்கியுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published.

19 − two =