பாலிவுட் படத்திற்கு இசையமைக்கும் சிம்பு தம்பி குறளரசன்

 

டி. ராஜேந்தரின் இளைய மகனும் நடிகர் சிம்புவின் தம்பியுமான இது நம்ம ஆளு படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

பாண்டிராஜ் இயக்கிய இப்படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்திருந்தார்.

அதன் பின்னர் எந்த படங்களுக்கும் இசையமைக்கவில்லை குறளரசன்.

இந்நிலையில் ஹாலிவுட் பாடகர்களை கொண்டு 5 பாடல்களை உருவாக்கி அந்த ஆல்பத்தை நியூயார்க் நகரில் வெளியிட்டார்.

அதன்பின்னர் 30க்கும் மேற்பட்ட ஹிந்தி பாடல்களையும் ஆல்பமாக வெளியிட்டுள்ளார்.

இதனையடுத்து ஒரு பாலிவுட் படத்தில் இசையமைக்க அவருக்கு வாய்ப்பு வந்துள்ளதாம்.

எனவே விரைவில் இப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *