மீண்டும் இரட்டை வேடத்தில் சிம்பு.; ஹாட்ரிக் வெற்றி ரெடி..?
லைகா தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் சிம்பு.
இதன் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.
இதன் பின்னர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கவுள்ள மாநாடு படத்தில் நடிக்கிறார் சிம்பு.
இப்படங்களை முடித்துவிட்டு கவுதம் மேனன் இயக்கத்தில் ஒரு படத்தில் சிம்பு நடிக்கவுள்ளார் என்பதை பார்த்தோம்.
இதில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என கூறப்படுகிறது.
இதற்குமுன் மன்மதன், சிலம்பாட்டம் ஆகிய படங்களில் 2 வேடங்களில் சிம்பு நடித்திருந்தார்.
இவை இரண்டும் சூப்பர் ஹிட்டானது.
எனவே இரட்டை வேடத்தில் ஹாட்ரிக் வெற்றியை அடிப்பாரா? என்பதை காத்திருந்து பார்ப்போம்.