*இந்தியன்2* படத்தில் கமல்-ஷங்கருடன் இணையும் சிம்பு..?
இந்தியன் படம் வெற்றிப் பெற்றதை அடுத்து 22 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியன் 2 படத்திற்காக கமல் மற்றும் ஷங்கர் இருவரும் இணைகின்றனர்.
இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, முத்துராஜ் கலை பணிகளை கவனித்து வருகிறார்.
இதன் செட் அமைக்கும் பணிகளை பூஜையுடன் படக்குழு துவங்கியுள்ளது.
அடுத்த டிசம்பர் முதல் இதன் சூட்டிங்கை தொடங்கவுள்ளனர்.
இந்நிலையில் இந்தியன் 2 படத்தில் முக்கிய வேடத்தில் துல்கர் சல்மான் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியானது. தற்போது அவருக்கு பதிலாக சிம்பு நடிக்கவுள்ளதாக செய்திகள் பரவியது. (நம் தளத்தில் அப்படியொரு செய்தியில்லை)
இதுபற்றி விசாரிக்கையில்… துல்கர் மற்றும் சிம்பு உள்ளிட்டோரை யாரும் அனுகவில்லை. என தகவல்கள் தெரிவிக்கின்றன