சிம்பு ரசிகர்களுக்கு சுந்தர் சி. தரும் தீபாவளி விருந்து

தெலுங்கில் வெளியாகி ஹிட்டான ‘Attarintiki Daredi’ படத்தின் தமிழ் ரீ-மேக்கை சுந்தர் சி. இயக்கி வருகிறார்
இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.
இதில் சிம்பு நாயகனாக நடிக்க, ரம்யா கிருஷ்ணன் அவரது அத்தையாக நடிக்கிறார்.
இதில் சிம்புவுடன் முதன் முதலாக யோகி பாபுவும் இணைந்து நடிக்கிறார் என்றும் தகவலை ஏற்கெனவே வெளியிட்டிருந்தோம்.
இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை தீபாவளி அன்று வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
இந்த ஃபர்ஸ்ட் லுக் சிம்பு ரசிகர்களுக்கு  தீபாவளி ‘விருந்தாக அமையும் என நம்பலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *