என்னை நம்பி கெட்டவங்க யாருமில்ல; சுந்தர் சி படத்தில் சிம்பு பன்ச்

சுந்தர் சி இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் வந்தா ராஜாவா தான் வருவேன்.

லைகா நிறுவனம் இப்படத்தை குறுகிய கால தயாரிப்பாக தயாரித்து வருகிறது.

இதில் சிம்பு உடன் மேக ஆகாஷ், கேத்ரின் தெரசா என இரு நாயகிகள் நடித்துள்ளனர்.

இவர்களுடன் மஹத், நாசர், ரம்யா கிருஷ்ணன், விடிவி கணேஷ், ரோபோ சங்கர், யோகி பாபு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் டீசரை இன்று வெளியிட்டுள்ளனர்.

அதில்… என்னை நம்பி கெட்டவங்க யாருமில்ல. ஆனா, நம்பாம கெட்டவங்க நிறைய பேர்” என்ற பன்ச் டயலாக் பேசியுள்ளார் சிம்பு.

எல்லாருடைய காதலுக்கும் நான் உதவி செய்றேன். ஆனால் எனக்கும் யாரும் உதவவில்லை என சிம்பு சொல்கிறார்.

நான் உதவுகிறேன் கேத்ரீன் தெரசா சொல்ல எனக்குத் தான் காதலி யாருமே இல்லையே என்கிறார் சிம்பு.

மேலும் அவருக்கே உரித்தான ஸ்டைலில் பாட்டு, ரொமான்ஸ் காட்சிகளும் உள்ளது.

இத்துடன் சுந்தர் சி படம் என்றால் கூட்டமாக நட்சத்திரங்களும் இருப்பார்கள். அதற்கும் குறைவில்லை.

இப்படத்தை 2019 பொங்கல் தினத்தில் வெளியிட உள்ளனர். ஆனால் இன்று வெளியான டீசரில் தேதி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *