நெல் ஜெயராமன் காலமானார்; மருத்துவம் & மகனின் படிப்பு செலவை ஏற்ற சிவகார்த்திகேயன்

திருத்துறைப்பூண்டிக்கு அருகிலுள்ள  கட்டிமேடு என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன்.
இவர் 160 அரிய வகை நெல் விதைகளை சேகரித்து வைத்திருந்தார்.
மேலும் பாரம்பரிய நெல்வகைகள காப்பாற்றுவதற்காக தேசிய, மாநில விருதுகளையும் பெற்றுள்ளார்.
ஆண்டுதோறும் நெல் திருவிழா நடத்தி பாரம்பரிய நெல்வகைகளை பிரபலப்படுத்தினார்.
எனவே இவரை நெல் ஜெயராமன் என்றே மக்கள் அமைத்து வருகின்றனர்.
இவருக்கு சித்ரா என்ற மனைவியும் 11 வயதில் மகனும் உள்ளனர்.
கடந்த 2 ஆண்டுகளாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார்.
இதையடுத்து சென்னை அப்பல்லோ தனியார்  மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.
நடிகர்கள் சத்யராஜ் சிவகார்த்திகேயன், கார்த்தி, சூரி உள்ளிட்டோர் சந்தித்தனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை 5.00 மணியளவில் காலமானார்.
அவரது உடல் சென்னையிலுள்ள தேனாம்பேட்டையில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
அரசியல் பிரபலங்கள் முதல் நடிகர் கார்த்தி உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர்.
இதனையடுத்து அவரது சொந்த ஊரான திருத்துறைப்பூண்டிக்கு வேன் மூலம் கொண்டு செல்லப்பட்டு நாளை மதியம் 12 மணிக்கு இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.
இதனையறிந்த நடிகர் சிவகார்த்திகேயன் நெல் ஜெயராமனின் உடலை சொந்த ஊருக்கு எடுத்து செல்வதற்கான மொத்த செலவு மற்றும் அவருக்கான மருத்துவ செலவையும் ஏற்றுள்ளார்.
மேலும் அவரின் மகன் படிப்புச் செலவையும் ஏற்றுள்ளார் இந்த சீமராஜா சிவகார்த்திகேயன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *