சிவகார்த்திகேயனின் 15வது படத்தில் இணையும் மித்ரன்-யுவன்
சீமராஜா படத்தை அடுத்து ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படம் ரவிக்குமார் ஒரு இயக்கத்தில் ஒரு படம் என நடிக்கவுள்ளார் சிவகார்த்திகேயன்.
இதில் ராஜேஷ் இயக்கும் படத்தை ஞானவேல்ராஜா தயாரிக்க நயன்தாரா நாயகியாக நடித்து வருகிறார்.
இதனையடுத்து தன் அடுத்த பட அறிவிப்பை இன்று அதிரடியாக வெளியிட்டுள்ளார்.
இப்படத்தை இரும்புத்திரை இயக்குனர் மித்ரன் இயக்கவுள்ளார்.
சிவாவின் ஆஸ்தான தயாரிப்பாளர் 24ஏஎம் ஸ்டூடீயோஸ் நிறுவனம் சார்பாக ஆர். டி. ராஜா தயாரிக்கிறார்.
ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, ரூபன் எடிட்டங்கை செய்யவுள்ளார்.
படத்தின் இசையை யுவன் சங்கர் ராஜா மேற்கொள்கிறார்.
ஏற்கெனவே சிவகார்த்திகேயன் நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்திற்கு யுவன் தான் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.