தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை இரங்கல்

கலைஞர் மு. கருணாநிதி மறைவிற்கு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை சார்பில் இரங்கல் தெரிவித்துள்ளனர். அதில், ” ஐந்து முறை அரியணை ஏறியவர் கலைஞர். தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் அவர் ஆற்றிய தொண்டு அணைவருக்கும் தெரியும்.

தமிழ் சினிமாவில் தனது வசனத்தால்
படங்களை வசூல் மழை பொழிய வைத்தவர் கலைஞர்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக இராமநாராயணன் இருக்கையில் முதல்வராக கலைஞர் இருந்தார். பிலிம்சேம்பருக்காக புதிய கட்டிடம் கட்ட இராமநாராயணன் அவர்கள் மூலம் கலைஞரை சந்தித்ததோம். எங்கள் கோரிக்கைகளை ஏற்று அனுமதி வழங்கி அடிக்கல் நாட்டு விழாவிலும் கலந்து கொண்டு வாழ்த்தினார். அன்று அவர் செய்த
மிகப் பெரிய உதவிதான் இன்று மிகப்பெரிய கட்டிடமாக சேம்பர் உருவெடுத்துள்ளது.

தமிழ் சினிமாவிற்கு அவர் வழங்கிய பல்வேறு சலுகைகளையும் மறக்கமுடியாது.

தமிழ் நாட்டிற்கு மட்டுமல்ல இந்திய துனைகண்டத்திற்கே வழிகாட்டியாக விளங்கியவர் கலைஞர்.

தாயுள்ளத்தோடு அவர் மக்களுக்கு செய்த பல்வேறு நன்மைகளை நினைத்து பார்த்தால் அவர் ஒரு தாயுமானவர்.
அவரது மறைவு நாட்டுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். ”
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *